திருப்பரங்குன்றம் பஞ்சாயத்துக்கள்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்துக்கள்
பஞ்சாயத்து no1:

1879 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலையில் குவாரி அமைக்க மதுரை துணை ஆட்சியர் அனுமதி

04/04/1879 அன்று குவாரி அமைத்தல் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திடம் கருத்து கேட்க கடிதம் அனுப்பியது தேவஸ்தானம் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் குவாரி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது

பிறகு 1885 ல் வனத்துறை சட்டத்தின் மூலம் மலை முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதி என்று வகைப்படுத்தப்படுகிறது

1904 ஆம் ஆண்டு குவாரி அமைக்க மீண்டும் முயற்சி செய்யப்படுகிறது மீண்டும் மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியதால் குவாரி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது

இதற்குப் பிறகு 1908 ஆம் ஆண்டு அன்றைய மதுரை ஆட்சியர் தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில் இருக்கும் பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச் சின்னமாக அறிவித்து மலையில் இதரப் பகுதிகளை புறம்போக்கு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என அப்போதைய அரசுக்கு கடிதம் கொடுத்தார்

இந்த கடிதத்திற்கு பிறகு குவாரி சம்பந்தமாக திருப்பரங்குன்றத்தில் வேறு பிரச்சனை அதன் பிறகு எழவில்லை

பஞ்சாயத்து no 2 :

மலையின் உரிமைக்கான பஞ்சாயத்து
உரிமைக்கோரிய பார்ட்டிகள்: கோயில்- அரசு-தர்கா

1917 ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் பள்ளிவாசல் தர்கா இருக்கும் பகுதிகள் தவிர மொத்த மலையும்யும் தேவஸ்தானத்திற்க் கே சொந்தமென்று வழக்கு தொடுக்கிறது இந்த வழக்கு அசல் வழக்கு எண் 101/1917 என்று பதிவு செய்து பிறகு அசல் வழக்கு எண் 06/1918 எனமாறி இறுதியாக அசல் வழக்கு எண் 04/1923 என நீதிபதி இராம ஐய்யரால் விசாரிக்கப்படுகிறது

இந்த பஞ்சாயத்தில் பிரதானமாக அரசுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் தான் பிரச்சனை அதாவது இந்த பிரச்சனையில் அரசாங்கம் ரயில்வே ஸ்டேஷன் கட்ட இடம் கேட்டதால் அரசாங்கத்திற்கும் கோயில் நிர்வாகத்திற்கும் வழக்கு நடக்கிறது இதில் அரசுக்கும் தேவஸ்தானத்திற்கும் பிரச்சனை முற்றி பள்ளிவாசல், தர்கா பகுதிகள் தவிர திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தேவஸ்தானத்திற்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது குறிப்பாக தேவஸ்தான தரப்பு மனுவிலேயே மசூதியும் அதற்கு செல்லும் பாதையில் இஸ்லாமியர்களின் சொத்துதான் என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதில் குறிப்பாக பள்ளிவாசல் தரப்புக்கும் தேவஸ்தான தரப்புக்கும் நெல்லி தோப்பு அதிலுள்ள மண்டபம் சம்பந்தமாக மட்டுமே பிரச்சனை வருகிறது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம ஐய்யர் திருப்பரங்குன்றம் மலையில் நேரில் சென்று ஆய்வு செய்து கிட்டத்தட்ட 370-க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து 21 சாட்சிகளை விசாரித்து 25/8/1923 அன்று தீர்ப்பு கூறுகிறார்

அந்தத் தீர்ப்பில் ராம அய்யர் தான் நேரடியாக சென்று விசாரித்ததில் நெல்லித்தோப்பில் பல இஸ்லாமியர்களின் சமாதிகள் இருந்ததும் அங்கு இருந்த மண்டபம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதையும் உறுதி செய்து நெல்லித்தோப்பு அதிலுள்ள மண்டபம் மண்டபத்திலிருந்து பள்ளிவாசலுக்கு வரும் படிக்கட்டுகள் பள்ளிவாசல் கொடியேற்றும் மலையுச்சி மற்றும் மக்கள் பயன்படுத்தும் நிலம் முழுவதும் இஸ்லாமியருக்கு சொந்தம்,

மேலே குறிப்பிட்ட பகுதிகள் தவிர காசி விஸ்வநாதர் கோயில் தீர்த்தம் உள்ளிட்ட மீதமுள்ள மலை முழுக்க தேவஸ்தானத்திற்கு சொந்தம் என்று தீர்ப்பு கூறினார்.

குறிப்பாக இந்த வழக்கில் பள்ளிவாசலுக்கு சார்பில் சாட்சி கூறியவர்களில் சாட்சிகளில் ஒரே ஒருவர் மட்டுமே இஸ்லாமியர் மற்ற நான்கு பேர் இந்துக்களே

மீண்டும் 1924 இல் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது 30/03/1926, 28/04/1926 தேதிகளில் இந்த மனு விசாரிக்கப்பட்டு 04/05/1926 ல் கோயில் மற்றும் தற்கா பள்ளிவாசல் இடம் தவிர மற்ற இடம் அரசுக்கே சொந்தம் என தீர்ப்பு வழங்கப்படுகிறது

இதற்கடுத்து 1930 தேவஸ்தானத்தின் சார்பில் privy கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 12/05/1931 ல் உயர் நீதிமன்ற தீர்ப்பை privy கவுன்சில் ரத்து செய்கிறது

இந்த மேல்முறையீட்டு வழக்கிலும் பள்ளிவாசலுக்கு எதிராக எந்த கோரிக்கையையும் தேவஸ்தான தரப்பில் வைக்கவில்லை

பஞ்சாயத்து no:3

சுதந்திரத்திற்கு பின் 1958 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தினர் சார்பாக நெல்லித்தோப்புக்கு மேற்கு பகுதியில் தர்கா நிர்வாகத்தினர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கற்களை வெட்டி புதிதாக மண்டபம் கட்டுகிறார்கள் எனவே இதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்,

இதை விசாரித்த நீதிபதி ஹெண்டர்ஸன் 02/12/1959 அன்று கற்கள் வெட்டப்பட்ட பகுதி கோயில் நிருவகத்திற்கு சொந்தமான இடம் இல்லை என்றும் மேலும் மண்டபம் கட்டுவதும் நெல்லித்தோப்பிலே உள்ளது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறார்.

இந்த நீதிபதி ஒரு அறிவுரையை கூறுகிறார் என்னவென்றால் 1923ல் ராம அய்யர் தீர்ப்பில் கோயில் நிர்வாகத்திற்கும் தர்காவிற்கும் மலையில் உள்ள அவர்களது உரிமையை உறுதி செய்திருக்கிறார் ஆனால் முறையாக எல்லையை வரையறுத்து கொடுக்கவில்லை எனவே அதை ஒரு நீதிபதி ஆணையர் அமைத்து எல்லையை வரையறுத்து தனி வழக்கு நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்

இதன் அடிப்படையில் 90/1960 இல் மேல்முறையீடு செய்து இரு தரப்பும் ஆணையம் அமைத்து சர்வே செய்ய ஒப்பு கொண்டதால் 12/7/1961இல் மேல்முறையீடு ரத்து செய்யப்படுகிறது

27/9/1964 அன்று ஆணையத்தால் அளவை செய்து வரைபடம் குறிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அதுவரை எல்லை சம்பந்தமாக உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது

வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து நடந்த திருப்பரங்குன்றம் மலை குறித்தான பஞ்சாயத்துகளில் மலையில் யாருக்கு எவ்வளவு இடம் யாருக்கு உரிமையென்று மட்டுமே பிரச்சனை நடந்துள்ளது மற்றபடி மதவெறுப்போடு மத வழிபாடுகள்,விளக்கு ஏற்றுவது குறித்தோ, இல்லை தர்காவில் கிடா வெட்டுவது சம்பந்தமாகவோ எந்த வழக்கும் நடைபெறவில்லை,
அப்படி வழிபாடுகள் குறித்த முரண்பாடுகள் இருத்தரப்புக்குமிடையே இருந்திருந்தால் கண்டிப்பாக அதுவும் நீதிமன்றத்தில் வழக்காக
பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆனால் வரலாற்றில் அது போன்ற நிகழ்வுக்கான எந்த பதிவுகளும் இல்லை

அங்குள்ள இரு மத மக்களும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவர் உரிமையை ஒருவர் புரிந்து கொண்டு உலக அரங்கில் எட்டு நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்திற்கான சின்னமாக விளங்குகிறது திருப்பரங்குன்றம் மலை.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலையை மதவெறுப்பின் அடையாளமாக மாற்றத் துடிக்கும் Rss சங்பரிவார கும்பலின் அதிகார வெறித்தான் திருப்பரங்குன்றம் மலை குறித்தான இன்று நடக்கும் இத்தனை குழப்பத்திற்கான காரணம்,

இன்னும் சொல்லப்போனால் திருப்பரங்குன்றம் மலை இந்து முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமில்லை அது சமணர் படுகையாகவும் இருந்திருக்கிறது அங்கு சமணர்களின் குடைவரை சிற்பங்களும் உள்ளது

எனவே திருப்பரங்குன்றம் இயல்பாகவே பல சமயத்தவர்கள் உரிமை கொள்ளக்கூடிய ஒரு பொது தளமே,

அங்கு மத அரசியல் செய்ய எந்த அமைப்புக்கும் வாய்ப்பு கொடுக்காமல் மக்களும் தமிழக அரசும் விழிப்போடு இருக்க வேண்டும்

   மேலே உள்ள வழக்கு சம்பந்தபட்ட தரவுகள் "திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும் "என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது

Comments

One response to “திருப்பரங்குன்றம் பஞ்சாயத்துக்கள்”

  1. ASHOKKUMAR G Avatar
    ASHOKKUMAR G

    Checking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *