Category: History

  • இஸ்லாம் இல்லையேல், இந்துத்துவமும் இல்லை..!

    இஸ்லாம் இல்லையேல், இந்துத்துவமும் இல்லை..!

    ”முஸ்லிம் சமூகத்துடன் சமரசம் செய்து கொள்வது என்பது இந்து தேசியவாதத்தின் உட்சபட்ச சாதனை அல்ல; அது, அதன் இறுதி மரணமாகும்.”
    அப்படி நிகழும் என்றால் RSS தன் நெறியழகையும், தனது அமைப்பு நிலைநிற்றலுக்கான தார்மீக காரணத்தையும் இழந்து விடும்.

    இந்த வருடம் (2025) அக்டோபர் 2 ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், RSS-இன் தலைவர் மோகன் பகவத், நாக்பூரிலுள்ள RSS தலைமையகத்தில் வருடாந்திர விஜயதசமி உரையை நிகழ்த்தவிருக்கிறார். அந்த உரை, RSS அமைப்பு உருவானதற்கான நூற்றாண்டை மையமாக கொண்டு நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உரையில் முக்கியமாக, நாட்டின் முஸ்லிம் குடிமக்களுக்கு அவர் தெரிவிக்கப் போகும் செய்தி என்னவாக இருக்கும்.
    என்ன சொல்ல போகிறார் மோகன் பகவத்?

    RSS இன் மிகவும் செல்வாக்கு வாய்ந்த தலைவர்களில் ஒருவரான M.S. கோல்வால்கர், ஒருமுறை ஹிட்லர் தனது நாட்டை யூதர்களிடமிருந்து “இன சுத்திகரிப்பு” குறித்து பாராட்டியிருந்தார். அப்படிச் செய்யப்பட்ட படுகொலைக்கான முன்னேற்பாடுகளை, “இந்துஸ்தானில் நமக்கு ஒரு நல்ல பாடம்” என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு, RSS தலைவர்களின் உரைகளில் முஸ்லிம்களை “அழித்தொழித்தல்” என்ற நோக்கம் குறைவாகவும், அவர்களை “சுத்திகரித்தல்” என்ற எண்ணம் அதிகமாகவும் வெளிப்பட்டுள்ளது.

    அதாவது கத்தோலிக்க மதக் கோட்பாட்டில், “purgation” என்பது சில ஆன்மாக்கள் சொர்க்கத்திற்குச்செல்லும் முன் அனுபவிக்க வேண்டிய சுத்திகரிக்கும் துயரக்காலமாகப் புரியப்படுகிறது. அதனால், “purgation” என்ற கருத்து இறுதியில் சமரசமும் மீண்டு வருவதற்கு (தாய் மதம் திரும்புதல்) அதுவும் மிகவும் நிச்சயமாக இருக்கும் வாய்ப்பை—குறிக்கிறது.

    கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு இப்படியான மீட்சிக்கான வாய்ப்பைப் பகவத் தொடர்ந்து காட்டி வருகிறார்; மேலும் தனது உரையிலும் அதையே மீண்டும் அலுத்தாமாக வலியுறுத்ததுவார்.

    2017ல், RSS அதன் வரலாற்றில் முதல் முறையாக, விஜயதசமி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போஹ்ரா சமூகத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான முநாவர் யூசுப் என்ற ஒரு முஸ்லிமை அழைத்தது, அடுத்த ஆண்டு, டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில், இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் “அடையாளத்தாலும் தேசியத்ததாலும் இந்து ஆவர்” என்று RSS தலைவர் வலியுறுத்தினார். அதோடு அவர் கூறியது: “ஹிந்து ராஷ்ட்ரம் என்றால் முஸ்லிம்களுக்கு இடமே இல்லை என்று அர்த்தமில்லை. அப்படியாகும் நாளில் அது இந்துத்துவம் அன்று.”

    அதேபோல், 2020 ஆம் ஆண்டின் விஜயதசமி உரையில், “இந்தியாவை தமக்கே சொந்தம் என ஏற்றுக்கொண்ட அனைவரும் ‘ஹிந்து’ என்ற சொல்லுக்குள் அடங்குவர்” என்றும், எனவே “நமது சமூகத்தில் உள்ள 130 கோடி மக்களுக்கும் அந்த சொல் பொருந்துகிறது” என்றும் பகவத் வலியுறுத்தினார்.
    இந்த உரைகளும் நடவடிக்கைகளும் சேர்ந்து ஆழ்மாக பார்த்தால், RSS ஒரு வகையான “ஒருங்கிணைப்பதற்கான திசை மாற்றம்” நோக்கிப் போகிறது. சங்க் அமைப்புக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமரசத்தின் பாதை உருவாகும் முன்னறிகுறிகளாக பொருள்படுகின்றன.

    RSS-ஐ நீண்ட காலமாகப் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் வால்டர் ஆண்டர்சன், மேலே குறிப்பிடப்பட்ட 2018 டெல்லி கருத்தரங்கில் பகவத் கூறியவற்றை “முஸ்லிம்களைப் பற்றிய RSS கருத்தின் வளர்ச்சி” பரிணமித்துள்ளதாக கருதுகிறார்.

    மேலும், ஆண்டர்சனின் ஆய்வை ஆழமாக வாசித்தால், RSS முஸ்லிம்களுக்கு எதிரான பகைமைத் தணிந்த அவசர நிலை காலத்திற்குத் தள்ளிச் செல்கிறது.
    அப்போது சங்க் தலைவர்கள் “முஸ்லிம்களுடன் சிறை வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டனர்”.

    ஆண்டர்சனின் அடுத்த முக்கியமாக கூறுவது:
    2002 ஆம் ஆண்டு RSS தலைவர் K.S.சுதர்ஷன் எடுத்த முடிவு தான் “இந்து முஸ்லிம் உறவுகளை மேம்படுத்துவதற்காக” முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சை அமைத்தது. அதனால் ஆண்டர்சனின் பார்வையில், முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது “சங்கபரிவாரத்திற்கான (சங்க் அமைப்புகள்)” செய்தியுடன் பகவத், சமரசத்தின் ஏணியில் அடுத்த படிக்குச் சென்று கொண்டிருக்கிறார். இதனை நாம் “உடனிணைவு கோட்பாடு” (Accommodation Thesis) என்று அழைக்கலாம்.

    அதன்பிறகு, இன்னும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு விளக்கமும் உள்ளது. அதன்படி, RSS முஸ்லிம்களை அணுகும் முயற்சியில், அவர்களை ஒரே மாதிரியான ஒரு அடையாளத்திற்குள் உட்புகுத்தி, சமுதாயப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. “ஒன்றாக்கும் (Assimilation) என்ற தர்க்கம் என்னவெனில், கீழ்மட்ட சமூகக் குழுக்களின் அடையாளச் சின்னங்களைத் தொடர்ந்து களைந்து அகற்றிக் கொண்டே சென்று, இறுதியில் அவர்கள் ஒரே மாதிரியான மேலோங்கிய அடையாளத்தில் கலந்துவிடும் வரை இணைப்பது.” இந்த செயல்முறைக்கான உதாரனமாக அடிக்கடி கூறப்படும் எடுத்துக்காட்டு, ஐரோப்பிய நாடு-மாநிலங்களின் உருவாக்கம்.

    “The RSS’ Plans to Resolve the Muslim Question” என்று பதற்றம் மூட்டும் தலைப்பில் 2022-ல் வந்த ஒரு கட்டுரையில், பத்திரிகையாளர் சானியா திங்ரா, முஸ்லிம்களை நோக்கி RSS காட்டும் அணுகுமுறையை, நீண்டகால இலக்கான “முஸ்லிம்களை இந்து அடையாளத்திற்குள் ’’ஒன்றாக்கும்” நன்கு திட்டமிட்ட நடவடிக்கை என்றே விளக்குகிறார். இந்த விளக்கத்தின் படி, RSS இன் நோக்கம் முஸ்லிம் அடையாளத்திற்கு இந்துத் தேசத்தில் தனியான சட்டப்பூர்வ இடமளிப்பது அல்ல; மாறாக, அவர்களின் அடையாளத்தை கரைத்தழித்து, எதிரியை “உட்கொள்வதே”. திங்ராவின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் முக்கிய கூறாக, முஸ்லிம் சமூகத்தின் கீழ்மட்ட சாதிப் பிரிவுகளான பஸ்மந்தா முஸ்லிம்களை நோக்கிய அணுகுமுறையாக அமைந்துள்ளது.

    இவ்விரண்டு கோட்பாடுகளின்: உடனிணைவு (accommodation) மற்றும் ஒன்றாக்கும் (assimilation) கோட்பாடுகள் சேரும் முக்கிய இடம் என்னவெனில், RSS மேற்கொள்ளும் இந்த அணுகுமுறையால் முஸ்லிம்களுக்கு உண்மையான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற பொதுவான நம்பிக்கையே.

    இவை வேறுபடுவது எதிலெனில், இந்த சமரசத்தின் நிபந்தனைகள் என்ன என்பது. அதாவது, முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தையும், அவர்களின் நலன்களையும், RSS எந்த அளவுக்கு இதில் சேர்க்கப் போகிறது என்பதில்தான். இந்த அணுகுமுறையின் விளைவாக, முஸ்லிம்களும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பாளர்களாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

    ஆண்டர்சனின் கூற்று படி, முஸ்லிம்கள் சமமான தரப்பினர்; சமரசத்தின் நிபந்தனைகளைப் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை அவர்களுக்கு உள்ளது. ஆனால் திங்ராவின் கருத்துப்படி, அந்த நிபந்தனைகள் பெரும்பாலும் RSS ஆல் முன்பே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. என்றாலும், திங்ராவின் விளக்கத்திலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையாக உள்ள பஸ்மந்தா குழுவிற்கு முன்னொரு காலத்தில் பழங்குடியினர் அல்லது தலித் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு போல இந்துத் தேசத்தில் சேர்வதற்கான ஒரு செயல்படக்கூடிய (ஆனால் கடினமான) வழி வழங்கப்பட்டிருக்கிறது.

    அவர்கள் தங்களின் தனிச்சிறப்பு அடையாளங்களைத் தளர்த்திக் கொள்ளலாம், RSSஇன் ஆதரவை ஏற்கலாம், மற்றும் இந்து நாட்டின் ஒருங்கிணைந்த அமைப்பில் இணையலாம்

    இந்த இரண்டு விளக்கங்களுக்கும் மாறாக, இந்த கட்டுரை வாதிடுவது என்னவெனில், முஸ்லிம்களைப் பற்றிய RSS இன் கருத்தியல் நிலைப்பாட்டில் எந்த உண்மையான “வளர்ச்சியும்” ஏற்படவில்லை. சமரசப்படுத்தும் முயற்சிகளும், ஒன்றாக்குவதன் மூலம் அச்சுறுத்தும் முயற்சிகளும் முடிவில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கற்பனை நாடகத்தின், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த இரண்டு கோடுகள் மட்டுமே.

    இந்த நாடகத்துக்கு, “முஸ்லிம் பிரச்சினை” என்ற ஒரு அழகான ஒப்பந்தத்தால் முடிவு அல்லது தீர்வு என்கிற இலக்கு கிடையாது. இது உருவாக்கப்பட்டதே, ஒரு நேரத்தில் பெருந்தன்மையையும், மற்றொரு நேரத்தில் பகைமையையும் வெளிப்படுத்தும் வகையில் மேடையில் கம்பீரமாக நடந்து வரும் ஒரு இந்து நாயகனை காட்டுவதற்காகத்தான்.

    அந்த நேரத்தில் எதிர் பாத்திரத்துக்கு (முஸ்லிம்) செய்ய ஏதும் இல்லாமல், விடுபட்டுச் செல்ல முடியாத ’’purgation’’ எனும் பின்னணிப் பகுதியிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.

    RSS கடந்த 100 ஆண்டுகளாக வெறும் இயக்கமாக பிழைத்து வரவில்லை. மாறாக, தொடர்ந்து பெரிய அமைப்பாக வளர்ந்ததுள்ளது. அதன் முக்கிய காரணம், மானுடவியலாளர் அர்ஜுன் அப்பாதுரை கூறுவது போல் “முழுமையற்ற பதட்டம்” என்று கூறும் உணர்வுக்கு ஆர்.எஸ்.ஏஸ் ஒரு வலுவான எதிர் மருந்தை (antidote) கொடுப்பதால் தான்.
    அப்பாதுரை கூறுவதன்படி, ஒவ்வொரு நாடும் தன்னுள் பல மதம், பல மொழி, பல கலாசாரம், பல சாதி போன்ற வேறுபாடுகள் கொண்ட மக்கள் கலந்து இருப்பதால், ஒரு வகையான பதட்டம் அந்த நாட்டை தொடர்ந்து பின்தொடர்கிறது. அதனால், அந்த நாடு “ஒரே இனத்தைச் சார்ந்த ஒரு சுத்தமான அடையாளம் இருந்தால் நல்லது” என்று விரும்பத் தொடங்குகிறது.
    இந்திய நாடு (குறிப்பாக மேலாதிக்கம் கொண்ட ஆட்சியாளர்கள் உள்ள இந்தியா) “முழுமையற்ற பதட்டம்” என்ற உணர்வை மிக அதிகமாக அனுபவிக்கிறது என்று நாம் கற்பனை செய்யலாம்.
    ஏனெனில் இந்தியா ஒரு தேசம், என்ற பெயரில் இருக்கும் போதிலும், கலாசாரம், மொழி, இனம், சாதி, மத வழக்கங்கள் போன்ற உலகிலேயே மிகக் குழப்பமான மற்றும் பல்வேறு அடையாளங்களின் பெரிய கலவையை வைத்திருக்கிறது.
    இந்த தேசிய பதட்டத்தை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது என்பதே RSS உருவாக்கிய சித்தாந்த மாயை. இதன்மூலம், மற்ற எல்லா பல்வேறு அடையாளங்களையும் “ஒரே இந்து அடையாளம்” என்ற அடித்தளத்திற்குள் ஒன்றுபடுத்தி விடுகிறது.

    இதனை இப்படி நினைத்துப் பார்க்கலாம்; பல நிறங்களைக் கொண்ட ஒளியை உள்ளே எடுக்கும் ஒரு கருவி, ஆனால் வெளியே காட்டும் போது இரண்டு நிறங்கள் காவி மற்றும் பச்சை மட்டும் தான் வெளிப்படும்.
    கலாசார வேறுபாடுகளின் பெரிய குழப்பத்தையும், அதனுடன் சேர்ந்து மக்கள் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையையும் இரண்டு பகுதி கொண்ட ஒரே மாதிரி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றும் பணியை RSS இந்திய தேசிய அரசுக்காக செய்து வருகிறது. இந்த வேலையின் காரணமாக, நாட்டின் உயர் சமூகம், ஆட்சியாளர்கள் (ப்யூரோக்ரசி) மற்றும் பொருளாதார உயர்வர்க்கத்தில் இருந்து RSS க்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கிடைக்கிறது.
    “ஒவ்வொரு இந்து இந்தியரும் இந்தியா நிலங்கள் முழுவதும் 100% இந்துக்களுக்கு இல்லை என்பதை அறிவார்கள்,” என்று அப்பாதுரை ஒரு பேட்டியில் சொல்கிறார். ஆனால் இது உண்மையாக மட்டும் இருந்தால் “சிறுபான்மையினரை முழுவதும் அழித்துவிட வேண்டும்” என்ற நோக்கத்துக்கு தானாகவே இட்டு செல்லாது, ஆயினும், 2002 குஜராத் கலவரம் போன்ற இடைக்கால வன்முறைகளாக வெடித்து அந்த எண்ணம் வெளிவரும் வாய்ப்பு இருக்கிறது.

    முழுமையற்ற பதட்டம்தான் குறிப்பாக இந்து-முஸ்லிம் பிளவை மையமாகக் கொண்டிருப்பதுதான், RSS ஐ உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் நிலைத்துள்ள, மிகப் பெரிய ஆதரவாளர்கள் கொண்ட வலதுசாரி அமைப்பாக மாற்றியதற்கான எரிபொருள். அதனால், இந்த பதட்டம் தொடர்ந்து உயிருடன் இருக்கவும், அடிக்கடி தூண்டப்பட்ட நிலையிலும் இருப்பதும் RSS-க்கு ஒரு நேரடி நலன் இருப்பதை தெளிவாக்குகிறது.
    நேரடியாக சொன்னால், முஸ்லிம் சமூகத்துடன் சமரசம் அல்லது இணக்கம் ஏற்படுவது, இந்து தேசியவாதத்தின் இறுதி வெற்றியல்ல. அதன் இறுதி முடிவை, அதன் மரணத்தை குறிக்கும்.
    மேலே கூறப்பட்டுள்ள மெல்லிய, கருத்தியல் புள்ளிகளை நன்கு புரிந்துகொள்ள, நாம் ஆய்வாளர் பெலிக்ஸ் பால் மேற்கொண்ட விரிவான கள ஆய்வை பார்க்கலலாம். அவர், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (MRM RSS இன் ஒரு இணை அமைப்பு) பற்றிக் கண்டறிந்துள்ளார். ஆண்டர்சன் மற்றும் திங்ரா இருவரும், RSS இன் முஸ்லிம் சமூகத்தை தொடர்புகொள்ளும் பணிகளில் மிக முக்கியமான பகுதி MRM தான் என்று கண்டறிந்துள்ளனர்.

    RSS உண்மையாக முஸ்லிம் சமூகத்துடன் இணக்கம் அல்லது இணைவைக் (accommodation/assimilation) செய்து கொள்ள விரும்புகிறது என்றால், அதற்கான தெளிவான ஆதாரம் குறைந்தபட்சம் இந்த மஞ்ச் நடத்தும் நிகழ்ச்சிகளில் குறிப்பாக “மதங்களின் கலப்பு”  (interreligious syncretism) போல அமைக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மேடைகளில் காணப்பட வேண்டும்.
    ஆனால் பால் கூறுவதன்படி, மஞ்ச் நடத்தும் இந்த “கலப்பு” நிகழ்ச்சிகள் உண்மையற்ற (insincere) நாடகங்கள். அவை உண்மையான சமரசத்தை உருவாக்குவதற்கல்ல மாறாக ‘இந்திய முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம்’  என்ற செய்தியை வெளிப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
    பால் கலந்து கொண்ட “சிங்க்ரெட்டிக்” (மதங்களின் கலப்பு எனக் கூறப்படும்) யோகா நிகழ்ச்சியில், மஞ்ச் தலைவரான இந்த்ரேஷ் குமார் மேற்பார்வை செய்தார்.
    அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடம் “ஜெய் ஸ்ரீ ராம்”  மற்றும் “அல்லாஹ் ஹூ” (இறைவன் மிக பெரியவன் என குறிக்கும் அகபர் என்று முழுமை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்தது.)  என்று முழக்கமிட சொல்லப்பட்டது. அங்கு இருந்த மௌலானாக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கத்தினர். ஆனால் அங்கு இருந்த எந்த இந்து சுவாமிகளும் “அல்லாஹ் ஹூ” என்று முழக்கமிடவில்லை. மத கலப்பு என்று வெளியே காட்டப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கூட, இந்து–முஸ்லிம் பிரிவு கட்டாயமாகப் பேணப்பட்டது என்று பால் கவனித்தார்.

    ’’அல்லாஹ் ஹூ” என்று சொல்ல மறுத்த சுவாமிகள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்ட மௌலானாக்களின் அருகில் கூட நிற்கவில்லை” என்று அவர் எழுதுகிறார்.

    ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு நிகழ்ச்சியில், மஞ்ச் சார்ந்த ஒரு இமாம் குர்ஆனின் மிகப் புனிதமான வசனத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, அவரது ஒலிவாங்கி பாதி வாசிப்பிலேயே பறிக்கப்பட்டது. காரணம், இந்த்ரேஷ் குமார் வந்துவிட்டார் என்பதை அறிவிப்பதற்காக. மஞ்ச் நடத்தும் ஒரு இப்தார் நிகழ்ச்சியில், ஒரு வயதான முஸ்லிம், இந்த்ரேஷ் குமார் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த போது, மரியாதையுடன், நோன்பை திறக்கலாமா என்று அனுமதி கேட்க எழுந்தார். அதற்கு இந்த்ரேஷ் குமார் “உக்காருங்க, வயதானவரே, நான் இன்னும் முடிக்கல” என்று கண்டித்தார். அத்துடன், அவர் முஸ்லீம்களை நோக்கி பேசுகையில், “நீங்க முதலில் உங்களை வன்முறையற்றவர்களாக மாற்றிகொள்ள வேண்டும். அப்போது தான் வன்முறையற்ற உலகத்தையும் உருவாக்க முடியும்.” இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில், இதை கூறிய இந்த்ரேஷ் குமார் — 2007 மெக்கா மச்ஜித் வெடிப்பு வழக்கில் தொடர்புடையர் என சிபிஐயால் விசாரனைக்கு அழைக்கப்படவர். மேலும் 2007 அஜ்மீர் ஷெரீப் வெடிப்பு வழக்கில் ராஜஸ்தான் போலீஸின் chargesheet ல் இடம் பெற்றவர்.
    “மஞ்ச் சிங்க்ரெட்டிசம் என்பது முஸ்லிம்கள் இந்துத்துவத்துக்கு நெருக்கமாக வருவதைப் போலத் தோன்றும். ஆனால் அவர்கள் அந்த நெருக்கத்தை ஒருபோதும் உண்மையில் அடையவிடமால் RSS உறுதி செய்கிறது. மஞ்ச் முஸ்லிம்கள் கட்டாயம் இந்துத்துவத்தின் திசையில் செல்ல முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதை அடைய கூடாது. சில வகையில் இது ‘ஹேசிங்’ சடங்குகளில் இருப்பது போலவே ஒரு அதிகார உறவை உருவாக்குகிறது.

    ஹேசிங் என்பது பல்கலைக் கழகங்கள், ராணுவ பிரிவுகள், விளையாட்டு குழுக்கள் போன்றவற்றில் நடைபெறும் துவக்கச் சடங்குகளின் ஒரு வடிவம். இதில் புதியவர்கள் தாழ்வான பணிகளைச் செய்ய வேண்டும். குழுவின் மூத்த உறுப்பினர்களை புகழ வேண்டும் அல்லது தங்களையே சடங்காய் அவமதிக்க வேண்டும். இந்த செயல்முறை, அதிகாரம் கொண்டவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டது என்று பல அறிஞர்கள் விளக்குகிறார்கள்.

    இந்த சடங்குகள் ‘ஹேசிங்’ செய்பவர்களுக்கு மிக வலுவான உணர்ச்சி ஆதாயத்தை அளிக்கின்றன. அவர்கள் அதிகாரமும் மேலாதிக்கமும் கொண்டவர்கள் என்ற உணர்வை பெறுவதற்காக. ஆனால், பால் ஒரு முக்கியமான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.

    ஹேசிங் (புதியவர்கள் மீது செய்யப்படும் அவமதிப்பு/ஆதிக்கச் சடங்குகள்) நடைமுறைகளுக்கும், RSS நடத்தும் கீழ்ப்படிதல் சடங்குகள்  எனப்படும் நடைமுறைகளுக்குமான பெரிய வித்தியாசத்தை இந்த கட்டூரை எடுத்துரைக்கிறது. அதாவது, RSS முஸ்லிம்களுக்கு வழங்குவது “வெளியேற முடியாத ஒரு சுத்திகரிப்பு” மட்டுமே. அவர்கள் எப்போதும் கீழ்மட்டத்தில் வைத்துக் கொள்ளப்பட்டு, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காத ஒரு நிலை ஆகும்.

    ஹேசிங் மற்றும் “நோக்கத்துடன் ஆனால் ஒருபோதும் முழுமையடையாத நெருக்கம் (intentionally incomplete proximity) இவை இரண்டிலும் கீழ்ப்படிதல் சடங்குகள் இருக்கின்றன. ஆனால் ஹேசிங்கில், இறுதியில் அந்த மனிதர் குழுவுக்குள் சேரும் வாய்ப்பு கிடைக்கும். RSS உருவாக்கும் நெருக்கத்தில், அந்த வாய்ப்பு திட்டமிட்டே முழுமையற்றதாகவே வைக்கப்படுகிறது.

    முஸ்லிகள் இந்துத்துவத்திற்குள் வர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் இன் இலக்கு அல்ல. அல்லது “குழுவில் சேர வேண்டும்’’ என்பதும் இலக்கு அல்ல. அப்படியானால் இந்த கருத்து (intentionally incomplete proximity) ஒரு சடங்குபூர்வமான பயணம் மட்டுமே.

    RSS தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையும், விஷமதனங்களையும் செய்து வரும் நிலையில், இந்த பயணம் முஸ்லிம்களை மேம்படுத்தும் ஒரு கற்றல் முறையாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. “அப்படியானால், முக்கியமானது இந்துத்துவதிற்குள் வருவது அல்ல. வருவது போல் முயற்சி செய்துக்கொண்டிருப்பது. அந்த முயற்சியாளர்க்கான பயன், முயற்சி செய்பவருக்கே (முஸ்லிம்களுக்கு) கிடைக்கவில்லை என்றால், இந்த இயக்கம். அல்லது இந்த இயக்கம் காட்டும் தோற்றம் மற்றவர்கள் பார்த்து ரசிக்கவும், நுகரவும் கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்பதில் சந்தேகம் இல்லை.

    நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், RSS நடத்தும் “முஸ்லிம்களை அணுகுவது” என்ற பிரச்சாரத்தின் உண்மையான பார்வையாளர்கள் முஸ்லிம்கள் அல்ல. அதன் இந்து தேசியவாத ஆதரவாளர்களே (அதோடு ஆண்டர்சன் மற்றும் திங்ரா போன்ற பார்வையாளர்களும்).
    இதில் பால் கவனித்தது என்னவெனில், மஞ்ச் அமைப்பின் பேஸ்புக் பக்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இந்து தேசியவாதிகள். அவர்கள் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இது போன்ற பெரும்பான்மையான சடங்குகளை பார்த்து ரசிப்பதற்காக அங்கே இருக்கிறார்கள் என்பது தான்.
    அப்படியானால், நாட்டுக்குள் “இந்து” மற்றும் “முஸ்லிம்” எங்கு நிற்க வேண்டும் என்று RSS உருவாக்கும் குறியீட்டு (symbolic) படம், இணக்கம் (accommodation)  அல்லது இணைவு (assimilation)  என்ற கோட்பாடுகளுடன் முற்றிலும் முரண்படுகிறது.

    இப்போது நாம் RSS ன் காட்டும் வழிமுறையை எடுத்துகொள்ளலாம்.
    ஹிந்துத்துவா விரும்பும் தனது இறுதி நிலையை (idealised end-state or telos) இந்துத்துவத்தின் இந்த பொய்யான நிலையை “வாகுப்புவாத கற்பனை”  (communal fantasy) என்று நாம் அழைக்கிறோம்.
    “வாகுப்புவாத கற்பனை” என்ற இந்த கருத்து, அறிஞர் டாட் மெகோவன் (Todd McGowan) தனது The Racist Fantasy: Unconscious Roots of Hatred  என்ற புத்தகத்தில் விளக்கிய “இனவாத கற்பனை”  (racist fantasy) என்ற கூற்றில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. மெகோவனின் படி, இனவாத மனநிலை ஒரு குறிப்பிட்ட கற்பனை அமைப்பில் (fantasy structure) உருவாகிறது. அதில் மூன்று முக்கிய பாத்திரங்கள் உள்ளன:

    1. தான் (the subject)
    2.  தான் ஆசைப்படும் பொருள் அல்லது நிலை (the desired object)
    3.  அதை அடைவதற்கு தடையாக நிற்கும் “மற்றவர்” (the other/obstacle)
    4. RSS ன் இனவழி கற்பனையில்:
    •  “தன்னை” = இந்து நாடு
    •  ஆசைப்படும் இலக்கு (object) = “அகண்ட் பாரத்” (Akhand Bharat)
    •  தடை / எதிரி (the other) = முஸ்லிம்

    RSS தலைமையினர் பெரும்பாலும் நாட்டை ஏற்கனவே ஒரு இந்து ராஷ்ட்ரம் (இந்து நாடு) என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதுவே நமது இயல்பான நிலை என்று வாதிட்டு வருகின்றனர்.
    ஆனால் இதில் ஒரு முக்கியமான பொருள் உள்ளது. அவர்கள் கூற்றுப்படி, அந்த இந்து நாடு என்ற பொருள் (subject)  எப்போதும் “அடிப்படையில் அச்சத்தில் இருக்கும் ஒன்று”  (ontologically insecure) அதாவது,  எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தப்படுவது குறிப்பாக “அரக்க குணம் கொண்ட முஸ்லிம். மேலும், இந்து சமூகத்தின் உள்ளேயே உள்ள பிளவுகள், பிரிவுகள், மற்றும் மாறுபட்ட சமூக உணர்வு. இந்த அச்ச நிலைமை, RSS-க்கு தன்னை இந்து நாட்டின் முக்கிய காவலர், முன்னணித் தலைவர், முக்கிய வழிகாட்டி எனத் திகழ்வதற்கான நெறிமுறை உரிமையைக் (moral legitimacy) வழங்குகிறது.

    இதனால் RSS கூறும் செய்தி, இந்து நாடு எதிரிகளால் அச்சுறுத்தப்படுகிறது. எனவே இந்து சமூகத்தின் சமூக உணர்வை சரியாக மாற்றி, அந்த எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தலைமைத்துவத்தை வழங்கும் முக்கிய பொறுப்பு நமக்கே (RSS) உள்ளது. இதுவே அவர்கள் தங்கள் அரசியல் மற்றும் வகுப்புவாத செயல்களுக்கு வழங்கும் “நெறிமுறை நியாயம்”.
    RSS-ன் முக்கிய இலக்கு அகண்ட பாரத். இதை “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாசாரம், ஒரே தேசம்” என்று விளக்கலாம். இந்து நாடு எப்போதும் “அடிப்படையாக அச்சத்திலிருக்கிறது” (ontologically insecure) என்று RSS கூறுவது, அவர்களின் அகண்ட பாரத் கற்பனையில் தெளிவாகப் தெரிகிறது. RSS மதிக்கும் அகண்ட பாரத் வரைபடத்தில் இந்தியா மட்டும் இல்லை. முழு தெற்காசிய துணைக்கண்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. RSS ஒருபோதும் இந்திய பிரிவினையை (Partition)  உறுதியான, முடிவடைந்த வரலாற்று உண்மையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இன்னும் “இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும்” என்ற கற்பனையை கொண்டுள்ளார்கள்.

    உண்மையில், RSS கிளைகள் இன்று வரை ஆகஸ்ட் 14 ஐ “அகண்ட பாரத் சங்கல்ப் திவஸ்” எனக் கொண்டாடுகின்றன. இந்த நடைமுறை சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆண்டுகளிலிருந்தே தொடங்கியது.
    மோகன் பக்வத், RSS ன் இந்த அகண்ட பாரத்  இலக்கில் உள்ள உறுதியை மீண்டும் வலுப்படுத்தியுள்ளார். 2022 ல் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பக்வத் பேசுகையில், அகண்ட பாரத் ஒரு மறுக்கமுடியாத உண்மை. பிரிந்த பாரதம் ஒரு பயங்கரமான கெட்ட கணவு (nightmare). மேலும், “பிளந்த உடல் உயிர்வாழ முடியாது. அதை சரிசெய்ய வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்ததால் இன்பமற்று உள்ளது, ஒருநாள் அது இந்தியாவுடன் இணைந்து அகண்ட பாரத்திற்குத் திரும்பும் என்றும் அவர் வாதிட்டார்.
    அதே ஆண்டு ஹரித்வாரில் நடந்த மற்றொரு நிகழ்வில், பக்வத் அகண்ட பாரதம் உருவாகும் நாள் மிக நெருக்கத்தில் உள்ளது  என்று கூறினார். ஏற்கனவே பயணித்தில் இருக்கிறோம். நமது காரில் பிரேக் இல்லை. ஆக்சிலரேட்டர் மட்டுமே உள்ளது. எதிரில் யார் வந்தாலும் அவர்கள் அழிந்துவிடுவார்கள். வந்துசேர விரும்புபவர்கள் எங்கள் காரில் ஏறலாம். இந்த கார் நிற்காது. நாம் இன்றைய வேகத்திலேயே சென்றால், அகண்ட பாரத் அடுத்த 20–25 ஆண்டுகளில் நிஜமாகும். ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் அதிக முயற்சி செய்தால், நிச்சயமாக செய்வோம் அந்த காலம் பாதியாகக் குறைந்து, அதை 10–15 ஆண்டுகளுக்குள் நிஜமாக்கலாம்.

    இதுகுறித்து RSS செயல்பாட்டாளர்கள் கூறுகையில், பகவத்தின் இந்த கருத்துகளை, இந்தியாவை தலைமையாக கொண்டு அண்டை நாடுகள் அனைத்தும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு (confederation) என்ற பார்வையாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
    எதுவாக இருந்தாலும், அகண்ட் பாரத்  என்ற ஆர்.எஸ்.எஸ் ன் கற்பனையின் பின் கருத்தை. மெகோவன் கூறுவது போல “கற்பனையில், அந்த இலக்கு (object) உண்மையில் முக்கியமல்ல. அதன் ஒரே முக்கியத்துவம், அது ஒருபோதும் அடைய முடியாதது என்பதே. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு தடையாக நிற்பது மற்றவர் தான்.
    அதாவது, அந்த ‘இனப்பிரிவு செய்யப்பட்ட மற்றவர் (முஸ்லீம்)
    தான் அகண்ட பாரதத்தை அடைய முடியாததற்கான முக்கிய தடையாக செயல்படுகின்றனர்.”

    மெகோவன், ஜெர்மன் தத்துவஞானி யோஹன் கோட்லீப் பிச்தே (Fichte) கூறிய வாதத்தை அடிப்படையாகக் கொள்கிறார்.
    ஃபிச்தே கூறியது, “நாம் நம்மையும் உலகையும் ஒரு ‘சுய-உருவாக்கம்’ (self-positing) மூலம் உருவாக்குகிறோம். ஆனால் இந்த சுய உருவாக்கம் எப்போதும் ஒரு தடையை சந்திக்கும். அந்த தடை நம்மை வரையறுக்க மட்டுமல்ல;
    அதை மீற முயல்வதற்கும் நம்மை தொடர்ந்து தள்ளுகிறது.”

    இந்த வாதத்தை RSS இன் சூழலுக்கு பயன்படுத்தினால், அர்த்தம் தெளிவாகிறது.
    முஸ்லிம் “மற்றவர்” என்ற உருவகம் இல்லாமல், இந்து நாடு “அடிப்படையாக அச்சத்திலிருக்கும் (ontologically insecure) ஒன்றாக இருக்க முடியாது. அதனால் அகண்ட் பாரத் என்ற கற்பனைக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. மேலும் RSS தன்னை இந்து நாட்டு காவலர் / பாதுகாப்பிற்கான அவசியமான அமைப்பு”
    எனக் காட்டிக்கொள்ளும் நெறிமுறை உரிமையையும் (moral legitimacy) இழந்து விடும். இதனால் RSS அமப்பிற்கான இருந்தலுக்கான காரணமும் அழிந்துவிடும். RSS தலைமையின் பார்வையில், இந்த வகுப்புவாத கற்பனையின் (communal fantasy) முக்கியத்துவம் வெறும் உணர்ச்சி ஈர்ப்பைத் தாண்டி செல்கிறது. இந்த கற்பனையின் முக்கிய அம்சம், “மற்றவர்” (முஸ்லிம்) என்ற உருவகம் RSS க்கு சமூக நிலைமை எப்படி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டும் வரைபடத்தை வழங்குகிறது.

    அதாவது, எது முக்கியம்? எது சமரசமாக ஏற்கக்கூடியது? எது விரும்பத்தக்க நிலைப்பாடு? இவற்றை தீர்மானிக்க RSS இந்த கற்பனையைப் பயன்படுத்துகிறது.
    உதாரணம்: கடந்த ஆண்டு விஜயதசமி உரையில், மோகன் பக்வத் கூறுகையில், இந்துக்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு காரணம், அவர்கள் பிரிந்தும் இருப்பதும், பலவீனமாக இருப்பது தான்.
    மகாராஷ்டிராவில் நடந்த விநாயகர் ஊர்வலங்களின் மீது நடந்ததாக கூறப்படும் (முஸ்லிம்) தாக்குதல்களை அவர் குறிப்பிட்டார். பங்களாதேஷில் இந்து சிறுபான்மையினரின் மீது நிகழும் (முஸ்லிம்) கொடுமைகளுக்கும், இந்துக்கள் பலவீனமாக இருப்பதே காரணம் என வாதிட்டார். இந்த தர்க்கம் RSS சிந்தனையில் ஆழமாக வேறூன்றியுள்ளது.
    இந்த தர்க்கத்தை பயன்படுத்தி அவர்கள் எல்லாவற்றையும் விளக்குகிறார்கள்: உதாரணத்திற்கு பிரிவினை (Partition) முதல் “ஆயிரம் ஆண்டுகள் அடிமை” என்ற கதை வரை. (அதில் “முஸ்லிம் ஆட்சி” மற்றும் “பிரிட்டிஷ் ஆட்சி” இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன) பாரத்திற்கு இருக்கும் ஒரே பாதுக்காப்பு உத்தரவாதம் இந்து ஒற்றுமையே. அதனால், பகவத், உயர்சாதி இந்துக்கள் (privileged-caste Hindus) தங்களின் தலித் சகோதரர்களை அணைத்து, ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று மிக வலுவான அழைப்பை விடுத்தார். அதை அவர் “ராஜ்புத்–வால்மீகி மாடல்” என எடுத்துக்காட்டினார்.
    அதே சமயம், தலித், பழங்குடி, மொழி சார்ந்த மற்றும் பெண்ணிய அரசியல்களை, துரோகம் நிறைந்த அடையாள அரசியல் (‘வோக்கிசம்) மற்றும் ‘கலாச்சார மார்க்சிசம்’ எனக் கூறி, அவற்றின் நியாயத்தையே (legitimacy) அவர் மறுத்துவிட்டர்.

    RSS-ன் முதல் சர்சங்க்சாலாக் (தலைவர்) K.B.ஹெட்கேவர், முஸ்லிம்களை “யவன பாம்புகள்” என்று குறிப்பிடுவார். யவன என்பது சமஸ்கிருதத்தில் கிரேக்கரை குறிக்கும் சொல் — அதாவது வெளிநாட்டவர், இன்னொருவர், அந்நியர் என்ற அர்த்தம். இந்த கற்பனையில், இந்து உடல் (Hindu body) இந்த “நச்சு கலந்த வெளிநாட்டவரை” (toxic alien) உள்ளே அனுமதித்தால், இறுதியில் அதன் முடிவு மரணமே. இதில், முக்கியமானது என்னவெனில் தேள்களின் நடனம்  தொடர வேண்டும். இந்து, முஸ்லிம் இருவரும் எப்போதும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கையாகச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் யாரும் ஒருவருக்கொருவர் அழிக்கும் அளவுக்கு துல்லியமான தாக்குதல்  தொடுக்கக் கூடாது. இந்த “நடனத்தில்” உண்மையில் விழுங்கப்படும் ஒரே விஷயம்.  புறக்கணிக்கப்பட்ட இந்து சமூகங்களின் எதிர்ப்பு உணர்வு தான்.
    அவர்களின் அரசியல் விழிப்புணர்வும் உரிமைக் குரலும் பெரிய இந்துத்துவ நோக்கத்தில் “அழுத்தப்பட்டு ஜீரணமாகிறது”.
    இதற்கிடையில் சேர்த்துகொள்ளப்படாத  (unaccommodated) முஸ்லிம் “மற்றவர்” என்ற உருவகம் RSS அமைப்பின் இருத்தலுக்கான அடிப்படை காரணமாக உள்ளது. அதன் சித்தாந்தத்தின் இறுதி இலக்கை (telos) வரையறுப்பது,  அதன் திட்டங்கள், அரசியல் வழிகள் எது என்பதைக் உருவாக்கும் போது மற்றவர் என்ற கருத்து அடிப்படையாக செயல்படுகிறது.
    இந்த அர்த்தத்தில், மோகன் பக்வத் கூறியதை நாம் பார்த்தோமானால்,  முஸ்லிம்கள் இல்லாமல் ஹிந்துத்துவம் இருப்பதே இல்லை என்பது தான்.
    (அதாவது “மற்றவர்” இல்லாத இந்துத்துவ கற்பனை செயல்படாது.)

    Asim Ali : No Muslim, no Hindutva என்கிற தலைப்பில் Front line இதழில் Sep 24, 2025 இல் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு.

    ஆசிரியர் அசிம் அலி

    மொழி பெயர்ப்பு : சம்சீர் அஹமது.

  •  ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்

     ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்

    அப்படியென்றால் அமித்ஷாவின் கட்சியான பிஜேபியையே தோற்கடிக்க கரப்பான் பூச்சி கட்சியால் வாய்ப்பு அமைந்து இருக்கிறதே அதையே ஆதரிக்கலாமே என்றால் முடியாது. கரப்பான் பூச்சிக் கட்சியும்  ஆர் எஸ் எஸ் சதி. பிஜேபி பலவீனமடையும் போது, நாட்டை தன்னுடைய இன்னொரு ஆளைக்கொண்டு ஆள்வது ஆர் எஸ் எஸ் சதி. கரப்பான் பூச்சி ஆம் ஆத்மி சதி என்கிறார்களே. ஆமாத்மியே ஆர் எஸ் எஸ் சதிதான்.!

    இந்த சதிக் கோட்பாடு பற்றி விவாதிப்பதற்கு முன்பு சில உண்மைகளைப் பார்த்துவிடுவோம்.

    அண்ணாமலை கோவை பி எஸ் ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்தார். பின்பு லக்னோ ஐ ஐ எம்மில் முதுகலை பிஸினெஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தார். அப்போது, அதாவது 2009இல்  விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட ர் கழகத்தில் இயங்கினார். பின்பு ஐ பி எஸ். கர்னாடகாவில் பணி.  இந்தக் காலகட்டத்தில் அதாவது 2020-இல் ரஜினிகாந்த், தான் தொடங்க இருக்கும் கட்சியில் இணைய அழைத்தார் என்றும் தான் பிஜேபியில் இணைய விருப்பம் தெரிவித்து விட்டதால் முடியதென்றும் சொல்லி விட்டதாக அண்ணாமலை கூறினார். தான் தேமுதிகவில் இருந்ததாக அவரே கூறியுள்ளார்.1

    இந்தியாவில் ஐ ஏ எஸ், ஐ பிஏஸ் பணிகளில் இருப்பவர்கள் வேலையை விட்டு விலகி அரசியல் கட்சிகளில் சேர்வது வழக்கம் தான். சிவகாமி ஐ ஏ எஸ், பி எஸ் பி கட்சியில் சேர்ந்தார். பாண்டியன் என்ற அதிகாரி நவீன் பட்நாயக் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சசிகாந்த் செந்தில் இப்படி பலர்.

    கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டியில் அண்ணாமலை ஒரு ஆம்பீஷியஸ் நபர் அதாவது அதீத எதிர்பார்ப்புகள் கொண்டவர், அவர் ரஜினி காந்த் கட்சி தொடங்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய போது அவரைச் சென்று சந்தித்து அந்தக் கட்சியில் இணைய முயன்றார். ஆனால் ரஜினி கட்சி தொடங்குவதைக் கைவிட்டதால் அது தோவ்வியடைந்தது. பின்பு அவரை பிஜேபி தலைவராக்கியது. இது பிஜேபி எடுத்த ஒரு பரிசோதனை முயற்சி. அவர் ஆர் எஸ் எஸ் அரசியல் கொண்டவர் அல்ல. பிஜேபிக்கு அண்ணாமலையைக் கொண்டு தொடங்கிய  பரிசோதனையைத் தொடரும் மனவலிமை இல்லை என்றார்.  

    அதிமுக தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்ததால் அவர் நீக்கப்பட்டார்.  தவிர அண்ணாமலை பிஜேபி தலைவராக இருந்த போது அவரால் ஓரம் கட்டப்பட்டிருந்த நீண்டகால பிஜேபி தலைவர்கள் அவருக்கு எதிராக அணி அமைத்து இயங்கினர்.  இதுவும் அண்ணாமலை நீக்கப்பட்டதற்கு ஒரு காரணம்.    அண்ணாமலையைக் கொண்டு பிஜேபி தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தை அடைய முயன்றது. அது சாத்தியமில்லை என்ற நிலை வந்ததும் அதற்கு அண்ணாமலை தேவையில்லாமல் போய்விட்டார். இதற்கிடையில்   ஆடு வளர்ப்பதாக பசுமை விகடனில் வந்த கவர் ஸ்டோரி எல்லாம் தனிக்கதை.  

    நடந்தது எல்லாமே   லாப நட்டக்கணக்குப் பார்த்த ஒரு அரசியல் நடவடிக்கை. தான் தேமுதிகவில் இருந்ததாக அவரே சொல்கிறார். அவர் ஆர் ஏஸ் எஸ் அல்லது ஏபிவிபியில் இருந்ததாக சொன்னதே இல்லை.  

    இதில் ஆர் எஸ் எஸ் எங்கே வருகிறது? சதி எங்கே இருக்கிறது.

    பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டு இந்துதுவ எதிர்ப்பு அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்ற திமுகவுக்கு பணி செய்த போதும் பார்ப்பனராகத்தான் இருந்தார். அப்போது அவரது பணி ஆர் எஸ் எஸ் சதி என்று அழைக்கப்படவில்லை. 

    கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது ஏன் ஆர் எஸ் எஸ், தவெகவை உருவாக்கவில்லை? அப்போது உருவான தேமுதிக ஏன் பெரிய வளர்ச்சி பெறவில்லை? தமிழக முதலாளித்துவ சக்திகளுக்கு அப்போது திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் போதும். இன்னொருக் கட்சிக்கு இடமில்லை. அந்த நிலையில் எந்த ஆர்எஸ்எஸ் சதியும் மூன்றாவது சக்தியை முதலிடத்துக்கு கொண்டு வந்து விட முடியாது.

    எம் ஜி ஆர் காலமான பின்பு அதிமுக தலைமையைக் கைப்பற்ற பல்வேறு லாபிகள் முயன்றன. அதில் இந்துத்துவ ஆதரவாளரான ’சோ ராமசாமி’ தலைமையிலான பார்ப்பன லாபியும் உண்டு. ஜெயலலிதா பிறப்பால் பார்ப்பனர் என்பதால் சில இந்துத்துவ பார்ப்பனர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் வழங்கினார். ஜெயேந்திர சரஸ்வதியுடன் நெருக்கம் காட்டினார்.

    ஆனால் சங்கராச்சாரியார், அதிமுகவின் முதுகெலும்பாக இருந்த தேவர் லாபியுடன் அதாவது சசிகலா ஆதரவு குழுவுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபட்ட போது கொடுமையாகத் தண்டிக்கப்பட்டார். இந்தியாவில் நினைத்தே பார்க்கதது நடந்தது. ஒரு சங்கராச்சாரியார் கொலை வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

    அதிமுகவின் செல்வாக்கு மண்டலம் ஜெயலலிதாவின் சாதியை விட முக்கியமானது. அதிமுக ஒரு முதலாளித்துவ கட்சி. அது நீடிக்க வேண்டுமானால் தென்மாவட்டங்களில் செல்வாக்கு வாய்ந்த சசிகலா சாதி அதற்குத் தேவை. சங்கராச்சாரியார் அதிமுக தலைமைக்கோ, அதன் ஆதரவு முதலாளிகளுக்கோ தேவையில்லை. எனவே சங்கராச்சாரியார் வெற்றி பெறவில்லை. விஜய்காந்த்தும்  வெற்றி பெறவில்லை.

    இப்போது அதிமுக கவர்ச்சிகரமான வலிமையான தலைமையை இழந்து உள்ளது. புதிதாக வளர்ச்சி பெற்ற கவுண்டர் சாதி அதன் தலைமையைக் கைப்பற்றியதால் மற்ற சாதிகளிடமிருந்து அன்னியப்பட்டுள்ளது. பிஜேபியுடன் மிகவும் நெருங்கியதால் மாநில முதலாளித்துவ சக்திகளின் ஆதரவையும் இழந்துள்ளது. எனவே இப்போது தமிழ் நாட்டுக்கு இன்னொரு மாநிலக் கட்சி அவசியத் தேவையாகவுள்ளது.

    இதன் காரணமாகவே பலநூறு கோடி செலவு செய்து விஜயால் மாபெரும் மாநாடுகள் நடத்த முடிந்தது. மிகவும் பெரிய வசதியான அலுவலகங்களை தமிழ்நாடு முழுவதும் திறக்க முடிந்தது. தொழில்ரீதியலான தேர்தல் உத்தி வகுக்கும் அமைப்புகளை பெரும் செலவில் பயன்படுத்த முடிந்தது. இந்தத் தேர்தலில் மிகவும் பாதிக்கப்பட்ட பிஜேபிதான்.  அதன் வாக்கு சதவீதம் 3 ஆகக் குறைந்து விட்டது. அதன் பலவீனம் காரணமாக அண்ணாமலை உடைத்ததில் மேலும் ஒரு சதவீதத்தை இழக்க வாய்ப்பு உள்ளது. அதன் இருபதாண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீரானது. இத்தனையும் ஆர் எஸ் எஸ் சதி என்று சொல்ல முடியுமா என்ன? அதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவைப்படும். அது நமது தோழர்களிடம் இருக்கிறது என்பதுதான் சிக்கலே.

    பிஜேபி கட்சியானது  அண்ணாமலை போல ஆர் எஸ் எஸ்  அமைப்பில் இல்லாத, அதில் பயிற்சி பெறாத பலரை இணைத்துக் கொள்வது வழக்கம் தான். அதன் முந்தைய அவதாரமான  ஜன சங்கத்தின் முதல் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியே ஆர் எஸ் எஸ்காரர் அல்ல. அவர் முதலில் காங்கிரசிலும் பின்பு சாவர்க்காரின் இந்து மகா சபையிலும் இருந்தார்.  இந்து மகாசபை தலைவரானர். காந்தி படுகொலைக்கு பிறகு இந்து மகாசபையுடன் கருத்து வேறுபடு கொண்டு விலகினார்.
    காந்தி கொலைக்கு பிறகு ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டது.   இந்து மகா சபை தடை செய்யப்படவில்லை.  ஆனால் இந்து மகாசபையின் தலைவர் சாவர்க்கார் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாவே சேர்க்கப் பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.  இந்து மகாசபை தேர்தல்களில் நின்று பல உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுதான் அது தடை செய்யப்படாததற்குக் காரணம் என்ற முடிவுக்கு ஆர் எஸ் எஸ் வந்தது.

    எனவே ஆர் எஸ் எஸ் தானும் ஒரு தேர்தல் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்தது. அந்த நேரத்தில் ஷியாமா பிரசாத் முகர்ஜி தனிக்கட்சி தொடங்க ஆர் எஸ் எஸ் ஆதரவைக் கோரினார்.  முகர்ஜி தீவிரமான முஸ்லீம் வெறுப்பாளராகவும் புத்தமதத்தில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ஆர் எஸ் எஸ், தீந்தயாள் உபாத்யாயா,  பால்ராஜ் மதூக், நானாஜி தேஷ்முக்  உள்ளிட்ட ஐந்து தலைவர்களை முகர்ஜிக்கு உதவ அனுப்பியது. இந்தத் தலைவர்கள் ஷியமா பிரசாத் முகர்ஜி மரணமடைந்ததும் ஜன் சங்கத்தைக் கைப்பற்றினர். காரணம் ஜன் சங்க் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அடித்தளத்திலேயே கட்டப்பட்டிருந்தது.

    ஆர் எஸ் எஸ், பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு பொருளாதார் கொள்கை வகுத்தவர், அதை சுதந்திர சந்தை, தடையற்ற முதலாளித்துவம் என்ற வழியில் நடத்தியவர் சுப்பிரமணியன் சுவாமிதான். இவர் சர்வோதய சங்கத்தில் இருந்தார். ராக்பெல்லர் ஸ்காலர்ஷிப்பில் ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். சுவாமி அமாத்யசென்னால் டெல்லி பல்கலைக் கழகத்தில் சீன கல்வியல் துறையில் பேராசிரியாராகப் பணிபுரிய அழைக்கப்பட்டார்.  ஆனால் அவரது சந்தைப் பொருளாதாரம் பற்றிய கருத்துக்களால் அவரது பணி தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்பு சுவாமி ஐ ஐ டி டெல்லியில் பேராசிரியரானர். அங்கும் இந்திரா காந்தியால் அவரது பொருளாதார கொள்கைகளுக்காக நீக்கப்பட்டார். பின்பு அவரை பாரதிய ஜனசங்கம் ராஜ்ய சபைக்கு அனுப்பியது. அவர் இந்திரா கந்தியை கடுமையாக எதிர்த்தார் என்பதுதான் காரணம். 
    சுப்பிரமணியன் சுவாமி விரையில் ஆர் எஸ் எஸ்சுக்கு நெருக்கமாகிவிட்டார். அவரை ஜனசங்குக்கு பொருளாதார திட்டம் அல்லது கொள்கை வகுத்துத் தரும்படி கேட்டுக்கொண்டனர். சுவாமி முதலாளித்துவத்தின் மீதான அரசு கட்டுப்பாட்டை நீக்குவது, தடையற்ற வணிகம் ஆகியவற்றை முன்வைத்தார். அது வேடிக்கையாக சுதேசி திட்டம் எனப்பட்டது என்கிறது ஜுகல்பந்தி நூல்.

    1960கள் வரை கடைக்காரர்கள், சிறுவணிகர்கள் மட்டுமே ஆர் எஸ் எஸ் க்கும் ஜன் சங்குக்கும் நிதியளித்து வந்தனர். ஜன சங்க் ஒரு பார்ப்பன பனியா கட்சியாகவே இருந்து வந்தது. ராஜ்மாதா விஜயராஜே சிந்தியா ஒரு விதிவிலக்கு.
    சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்பே இந்த சுதந்திர முதலாளித்துவம், தடையற்ற வணிகம் ஆகியவற்றையெல்லாம் பற்றிப் பேசியவர் ஜன சங்க தலைவரும் ஆர் எஸ் எஸ் பிரசாரக்குமான பால்ராஜ் மதூக். இவர் ஜன சங்க் கட்சியை இதே போன்ற கொள்கைகள் கொண்ட சுதந்திரா கட்சியுடன் இணைத்து விட வேண்டும் என்ற போது ஜன சங்கிலும், ஆர் எஸ் எஸ்ஸிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்குக் காரணம் ஆர் எஸ் எஸ் காரர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த பழமைவாத பிராமணர்கள்.நவீன கல்வி இல்லாதவர்கள். இவர்களால் மாசானி போன்ற வெளிநாட்டு கல்வி கற்றவர்கள், ராஜாஜி போன்ற முன்னாள் கவர்னர் ஜெனரல்கள் இருந்த சுதந்திரா கட்சியுடன் வர்க்க ரீதியில் ஒத்துப் போக முடியவில்லை என்கிறார் ”ஜுகல் பந்தி – மோடிக்கு முந்தைய பிஜேபி” என்ற பிஜேபி பற்றிய வரலாற்று நூலை எழுதிய வினய் சீதாபதி. இந்தச் சித்திரம் சகலத்தையும் சதி செய்து தீர்மானிக்கும் ஆர் எஸ் எஸ் என்ற கருத்துடன் ஒத்துப் போவதில்லை. 

    1967 பாராளுமன்ற தேர்தலில் ஜன் சங்க் 35 இடங்களில் வென்றது. 9.31 சதவீத வாக்குகள் பெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது. சுதந்திரா கட்சி  44 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் சுதந்திரா கட்சி திமுக உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. பல முன்னாள் சுதேசி மன்னர்களும், ஜமீந்தார்களும் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர்.  இருந்தும் அதன் வாக்கு சதவீதம் 8.67 மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் ராஜாஜி எண்பது வயதுக்கு மேலாகி தளர்ந்து வந்தார். மேலும் சொல்லிக் கொள்ளும்படி தலைமை அந்தக் கட்சியில் இல்லை. நிலப்பிரபுத்துவ சக்திகளையும், உயர்சாதி நடுத்தர வர்க்கத்தையும் நம்பியிருந்ததால் கட்சி அமைப்பும் வலிமை வாய்ந்ததாக இல்லை. ஜி டி பிர்லா ”சுந்திரா கட்சியின் அரசியல் நல்ல பிஸினெஸ்மேனுக்கான அரசியலல்ல’ என்றார். ஸ்டான்லி கொசானெக் என்ற ஆய்வாளர் சுதந்திரா கட்சிக்கு பெரிய முதலாளித்துவ அமைப்புகள் நிதியுதவி செய்யவில்லை என்கிறார். காரணம் நேருவிய காங்கிரஸ் அரசானது பெருமுதலாளித்துவ அமைப்புகளின் நலனை தீவிரமாகப் பாதுகாத்து வந்தது. 

    ஜன சங்க் கட்சிக்கு நல்ல அமைப்பு வடிவம் இருந்தது. ஆர் எஸ் எஸ் காரணமாக உள்ளூர் மட்டத்தில் தொண்டர் பலமும் இருந்தது.  இந்தக் காலகட்டத்தில் இந்திரா காந்தியை விரும்பாத, அவரது பொருளாதார கொள்கைகளை விரும்பாத பாம்பாய் தொழிலதிபர்கள் ஜனசங்க் ஒரு நல்ல மாற்றுக் கட்சியாக இருக்கும் என்று 1967 தேர்தலில்   இருந்து புரிந்து கொண்டனர். இந்த தொழிலதிபர்கள் இந்துதுவத்தின் மேல் சிறுதளவு ஆர்வமும் இல்லாதவர்கள். பலர் இந்துக்களே அல்ல. பார்சி மதத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களும் நாட்டில் முதலாளித்துவத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டுமென்றனர். அதாவது ஏற்கெனவே இருந்த வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நிறுவனங்கள் மீதான அரசு கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றனர். புதிய முதலாளிகள் தோன்றுவதையும், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதையும் இவர்கள் தடுக்கவே விரும்பினர்.   

    இவர்களில் மிகவும் முக்கியமானவர் ஒருவர். நுஸ்லி வாடியா. பாம்பே டையிங் நிறுவனத்தின் அதிபர். பார்சி மதத்தைச் சேர்ந்தவர். ஜின்னவின் மகள் வழிப் பேரன்.  நுஸ்லி வாடியா ஜன் சங்கின் பொருளாளர் நானாஜி தேஷ்முக் உடன் 1960 களில் அறிமுகமானார். அவர்தான் டாடாவை நானாஜிக்கு அறிமுகப்படுத்தினார். துணிச்சல் மிக்கவரும், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப் பெயர் பெற்றவருமான நுஸ்லி வாடியா, 1970களில் சர்வ வல்லமை வாய்ந்தவராக இருந்த இந்திரா காந்திக்கு அஞ்சாமல் ஜன் சங்குக்கு பெரும் தொகைகளை நன்கொடையாகக் கொடுக்கத் தொடங்கினார். இவரைப் பின்பற்றி டாட்டாக்களும் மபஃபத்லால்களும் ஜனசங்கிற்கு நன்கொடை அளிக்கத் தொடங்கினர். இந்த முதலாளிகள் ஜன சங்கை ஆட்சிக்கு கொண்டு வந்து விட வேண்டுமென்ரு முனைந்து நிற்கவில்லை.  அவர்களுக்கு காங்கிரஸ் அரசில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.  ஆனால் இந்திரா காந்தியின் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக இன்னொரு சக்தி இருந்தால் நல்லது என்ற கருத்திலேயே நன்கொடை அளித்தனர்.

    எனவே  ஜன சங்க்கை தடையற்ற முதலாளித்துவ கொள்கையை நோக்கி  பால்ராஜ் மதூக் என்ற முக்கியமான தலைவர், சுப்பிரமணியன் சாமி, நுஸ்லி வாடியா போன்றோர் உந்தித் தள்ளினர். அந்த நேரத்தில் வாஜ்பாய் நேருவியத்தை ஆதரித்து வந்தார். ஜன சங்க் கட்சிக்குள் கடும் கொள்கைப் போராட்டம் நடந்தது.  இந்திரா காந்தி வங்கிகளை தேசிய உடமையாக்கிய போது வாஜ்பாய் ஆதரித்தார். அதே பாராளுமன்றத்தில் அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு தலைவரான  மதூக் எதிர்த்தார். நாட்டின் பணம் அதிகாரிகளின் கையில் போய்விடும். மக்கள் அவர்களிடம் சிக்கிக் கொள்வார்கள் என்றார் மதூக்.  இந்த மதூக் தான் ஜன் சங்க தலைவர் தீன்தயாள் உபாத்யாயா ஒரு ரயிலில் இருந்து வெளியே வீசிக் கொல்லப்பட்ட போது, அதற்கு வாஜ்பாயும், அத்வானியும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

    பின்பு வாஜ்பாய் தந்திரமாகச் செயல்பட்டு நானாஜி தேஷ்முக்கையும், பால்ராஜ் மதுக்கையும், சுப்பிரமணியம் சுவாமியையும் ஜன் சங்கத்தை விட்டு விலகச் செய்தார். இதெல்லாம் ஜன் சங்க் எல்லாக் கட்சிகளையும் போன்றதுதான், எல்லாக் கட்சிகளிலும் இருக்கும் குழப்பங்களும், கோஷ்டி மோதல்களும் இந்தக் கட்சியிலும் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இத்தனையையும் ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு நடத்த முடியுமா என்ன? இந்த நடவடிக்கைகளில் ஆர் எஸ் எஸ் வாஜ்பாயை ஆதரித்தது. அதற்கு ஒரே காரணம் தான். டெல்லி ஆளும் வர்க்க வட்டங்களில் வாஜ்பாய்க்கு செல்வாக்கு இருந்தது. அத்வானி போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் உறுதியாக வாஜ்பாயை ஆதரித்தனர். வேறு வழி இல்லை. மேற்குறிப்பிட்ட எதையுமே ஆர் எஸ் எஸ் சதி என்று சொல்லவே முடியாது. இந்த நடவடிக்கைகளில் பல்வேறு அரசியல் சக்திகளின் நலன்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

    1934 இல் காங்கிரஸ் தனது உறுப்பினர்கள் இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகளில் இணைவதை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. கோல்வால்கர் மத்தையும், பண்பாட்டையும் காப்பதன் மூலமே விடுதலையை அடைய முடியும், பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதன் மூலம் அல்ல என்றார். இரண்டாம் உலக போரின் போது ஆர் எஸ் எஸ் அமைப்பின் ராணுவப் பிரிவையும் பிரிட்டிஷ் அரசின் உத்தரவின் பேரில் கலைத்தார்.  இந்தக் கால கட்டத்தில் சாவர்க்காரின் இந்துமகாசபை ஹிந்து மிலிடரைசெஷன் போர்டுகள் என்ற அமைப்பை உருவாக்கி இந்தியர்கள் ப்ரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவித்தது. இந்த இரண்டு அமைப்புகளும் கடற்படை எழுச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

    ஆர் எஸ் எஸ் தேசிய கொடியை எதிர்த்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்தது. மனுதர்மத்தின் அடிப்படையிலேயே சட்டம் இருக்க வேண்டும் என்றது. நமது அரசியல் சட்ட நிபுணர்களுக்கு மனுஸ்மிரிதி ஒன்றுமேயில்லை. ஆனால் உலகம் அதைக் கொண்டாடுகிறது என்று ஆர்கனைசர் 30.11. 1949 இல் எழுதியது. மனு எங்கள் இதயங்களை ஆள்கிறார். மனு ரூல்ஸ் அவர் ஹார்ட்ஸ் என்ற கட்டுரையை சங்கர் சுப்பா அய்யர் என்பவர் எழுதினார். டாக்டர் அம்பேத்கார் மனுவின் காலம் முடிந்து விட்டது என்று எழுதினாலும் இன்றுவரை இந்துக்களின் தினசரி வாழ்க்கை மனுஸ்மிரிதி மற்றும் ஏனைய ஸ்மிரிதிகளின் விதிகளின் படியே நடக்கிறது என்றார் அய்யர்.  கோல்வால்கர் நமது அரசியல் சட்டம் பலவேறு மேற்கத்திய நாடுகளின் சட்டப் பிரிவுகளை இணைத்து எழுதப்பட்டது. அதில் நம்முடையது  ஒன்றுமேயில்லை என்றார்.  ஆனால் இந்த எதிர்ப்பைக் கொண்டு ஆர் எஸ் எஸ்ஸால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியவில்லை. இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆர் எஸ் எஸ்ஸை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

    காந்தி கொலைக்குப் பிறகு பல ஆர் எஸ் எஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  விடுவிக்கப்பட்ட பிறகு கோல்வால்கர் தங்கள் மீதான தடையை நீக்கும் படி நேருவிடம் கோரினார். நேரு அது உள்துறை அமைச்சகத்தின் வேலை என்றார். உள்துறை அமைச்சரான பட்டேல் தடையை நீக்க கோல்வால்கரிடம் பல நிபந்தனைகள் விதித்தார்.

    • ஆர் எஸ் எஸ் எழுத்து பூர்வமான கட்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
    • அதை வெளிப்படையாக வைக்க வேண்டும்.
    • அரசியல் சட்டத்தை ஏற்று நடக்க வேண்டும்
    • தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ள வேண்டும்
    • உட்கட்சி தேர்தல்கள் நடத்த வேண்டும்
    • தலைவரின் அதிகாரத்தை வரையறுக்க வேண்டும்
    • சிறுவர்களை சேர்க்கும் போது பெற்றோர் ஒப்புதல் வேண்டும்
    • வன்முறையை கைவிட வேண்டும்

    கோல்வால்கர் இதை ஏற்றுக் கொள்ள மறுத்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்தினார். பின்பு ஆர் எஸ் எஸ் தனக்கு ஒரு கொள்கைத் திட்டத்தை வரையறுத்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. முதலில் பட்டேலுக்கு ஆர் எஸ் எஸ் மீது மென் போக்கு இருந்தது. காந்திகொலை அதை மாற்றி விட்டது. 

    சாவர்க்கார் ஆர் எஸ் எஸ்ஸை இந்து மகாசபையுடன் இணைக்க விரும்பினார். ஆனால் ஆர் எஸ் எஸ் மறுத்து விட்டது. இந்துமகாசபை ஆர் எஸ் எஸ்ஸை தனது இளைஞர் அமைப்பாக மாற்ற முயல்வதை ஹெட்கேவாரும், கோல்வால்கரும் தொடர்ந்து தடுத்து வந்தனர்.  கடுப்பான சாவர்க்கார்

    ஒருவன் பிறந்தான், ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தான். ஒன்றுமே செய்யாமல் இறந்து விட்டான்   என்றார்.

    காந்தி கொலைக்குப் பின்பு இந்து மகாசபை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்தது. அறுபதுகளில் ஏறக்குறைய செயலிழந்து விட்டது. ராஜாஜியின் மரணத்துக்குப் பிறகு சுதந்திரா கட்சி செயலிழந்தது.   அப்போதும் கூட மகாத்மா காந்தி கொலையின் காரணமாக மக்கள் ஜன சங்க் கட்சியை ஏற்றுக் கொள்ளவேயில்லை. “இது எனக்குப் புரிந்ததும் காந்தியவாதியான ஜெயபிரகாஷ் நாரயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோருடன் நெருங்க முயன்றேன். இந்த இருவரும் எங்களை ஒப்புக் கொண்ட பின்பே மக்களும் எங்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்” என்கிறார் நானாஜி தேஷ்முக் என்ற முன்னாள் ஜனசங்க தலைவர்.2

    இந்து மகாசபை, சுதந்திரா கட்சி ஆகியவை இல்லாமல் போனது ஜன சங்கை இந்தியாவின் ஒரே வலதுசாரி, இந்துத்துவ கட்சியாக முன்னிறுத்தியது.    எழுபதுகளின் நடுப்பகுதி வரை ஆர் எஸ் எஸ் ஒரு சதியும் செய்யவில்லை. செய்தாலும் வெற்றி பெறவில்லை.  20000 ஆர் எஸ் எஸ் காரர்கள் காந்தி கொலைக்கு பின்பு கைது செய்யப்பட்டனர். 75 வரை அவர்கள் வாக்கு 9 சதவீதம்தான். பசு பாதுகாப்பு இயக்கம் நடத்திய பிறகும் இதுதான் நிலை. அப்போதும் இதே நாக்பூர் பிராமணர்கள் தான் ஆர் எஸ் எஸை நடத்தி வந்தனர்.  இந்தியாவின் அதிகார அமைப்பு பிராமணர்களின் கையில் தான்  இருந்தது.  எனவே சதி என்பது அபத்தமானது. அரசியல் சூழல் உருவாக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல். அதற்கான சூழல் பின்பே பிஜேபி, ஆர் எஸ் எஸுக்கு வந்தது.

    காங்கிரஸ் எண்பதுகளில் பல கலகங்களை சந்தித்தது. தேசிய இனப் போராட்டங்கள், நக்சல்பாரி, விவசாயிகள் எழுச்சிகள் என. அப்போது ராஜீவ் காந்தி இந்து மத உணர்ச்சி  இந்தியாவை ஒன்றாக வைக்க உதவும் என்ற நிலை எடுத்து  தூர்தர்ஷனில் ராமாயணம் தொடர் நாடகத்தை ஒளிபரப்பினார். அயோத்யா மசூதியை இந்து வழிபாட்டுக்கு திறந்து விட்டார். எனவே காங்கிரஸ் தொடங்கி வைத்துதான் இந்துத்துவா பெரிய சக்தியாக வளர்ந்தது. அதற்கு முன் இந்திய மொழிகளில் பல ராமாயண படங்கள் வந்திருந்த போதும் வீட்டுக்கே வந்த இந்த டெலிவிஷன் ராமாயணம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அது ஒளிபரப்பப் படும் போது தெருக்கள் வெறிச்சோடிப் போயின. ரயில்களை ராமாயணம் முடியும் வரை நிறுத்தி வைக்கும் மாறு பயணிகள் கலவரம் செய்தனர். 

    1984 இல் பிஜேபி இரண்டே இரண்டு பாராளுமன்ற இடங்கள் மட்டுமே வென்றிருந்தது.  அப்போதுதான் மற்ற அரசியல் வாதிகளை நம்ப முடியாது. இந்து வாக்கு வாங்கி உருவாக வேண்டும் டியோரஸ் சொன்னார். அதிலிருந்து தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இயக்கம் தீவிரமடைந்தது. ராம் ஷீலா பூஜைகள் நடத்தி பிஜேபி ராமர் கோவில் கட்டும் இயக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டது.

    ஆர் எஸ் எஸ் பல துணை அமைப்புகளை உருவாக்குகிறது. அன்னா அசாரே, தவிர ஐ ஐ டி போன்ற நிறுவங்களில் ஊடுருவுகிறது என்பது எல்லாம் தான் ஆர் எஸ் எஸ் சதிக்கு ஆதாரமாகக் கூறப்படுகின்றன. இதெல்லாம் முன்பு காங்கிரசுக்கு  ஆதிக்க சாதியினர் செய்ததுதான். பின்பு இவர்கள் பிஜேபிக்கு மாறினர். இவர்கள் மனதில் இந்தியா தங்களுடையது, இதைக் கட்டிக் காப்பது தங்கள் கடமை என்ற எண்ணம் இருக்கிறது. மற்றவர்கள் இதை உடைக்க சிதைக்க முயல்கின்றனர் என்று நினைக்கிறார்கள்.  இதன் காரணமாகவே காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு தடையற்ற முதலாளித்துவம், இந்து ஆதிக்க சாதி ஆதிக்கம் ஆகிய கொள்கைகளைக் கொண்டிருந்த பிஜெபியை ஆதரிக்கின்றனர்.

    இப்போதும் கூட பிஜேபி இந்துத்துவ அரசு தனியார் மயம், உலக மயம், பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவறைக் கைவிட்டால் கார்ப்பரேட் உலகால் கைவிடப்படும். அப்போது நாக்பூர் சதியால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. கார்ப்பரேட் சக்திகள் நாட்டின் முக்கால் வாசி செய்தி சேனல்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, கற்பனையே செய்ய முடியாத மாபெரும் தொகைகளை பிஜேபிக்கு நன்கொடையாகக் கொடுக்கின்றன. மாநிலக் கட்சிகளை இந்த கார்ப்பரேட் அமைப்புகள் மிரட்டி பிஜெபி ஆதரவு நிலைக்குத் தள்ளூகின்றன.

    உதாரணமாக திமுக அரசு கோவை குடிநீர் விநியோகத்தைக் கையில் வைத்திருக்கும்  பிரஞ்சு நிறுவனமான சூயஸுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூயஸ் நிறுவனம் பிஜேபி அரசின் பொருளாதார கொள்கைகளின் காரணமாகவே இங்கே வந்துள்ளது. எனவே சூயஸுக்கு பிஜேபியும், பிஜேபிக்கு சூயசும் ஆதரவாக உள்ளன. திமுக இதில் ஒன்றுமே செய்ய இயலாது. பண்பாட்டு தளத்தில் இந்துத்துவாவை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும் பொருளாதார தளத்தில் பிஜேபியை கொள்கையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

    இதில் நாக்பூர் பார்ப்பனர்கள் என்ன சதி செய்து , அனைத்தையும் தீர்மானித்து ?

    பெரும்பாலான வட இந்திய கட்சிகளுக்கு தென்னிய கட்சிகள் குறிப்பாக நமது திமுக, அதிமுக போல கட்டமைப்பு கிடையாது.  ராகுல்காந்தி தேர்தல் மோசடிகளை அம்பலப் படுத்தினார் அல்லவா? அதில் ’0’ என்ற வீட்டு எண் கொண்ட வாக்காளர்கள், ஒரே வீட்டில் முப்பது நாற்பது வாக்களர்கள், ஒரே வாக்காளருக்கு பலவேறு தொகுதிகளில் வாக்கு என்று பல சித்து வேலைகள் இருந்தன. தமிழ்நாட்டில் எல்லா வார்டுகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் இருக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் கட்சிகள்   இந்தப் பட்டியலை வைத்து வாக்காளர்களைச் சந்திப்பார்கள், பூத் ஸ்லிப் கொடுப்பார்கள். இங்கே 0 என்ற முகவரியிட்ட வீடுகள், வாக்காளர்கள் எல்லாம் சாத்தியமேயில்லை. மிகச் சிறிய முறைகேடுகள் கூட எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். அதையும் மீறி வெளியாட்கள் வாக்களிக்க வந்தால் பூத்களில் குவிந்திருக்கும் கட்சிக் காரர்கள், ஏஜெண்டுகள் கண்டுபிடித்து விடுவார்கள். இந்த பூத் ஏஜெண்ட்ட்டுகளே இல்லாத காரணத்தால்தான் வட இந்திய கட்சிகளை பிஜேபி ஏமாற்ற முடிந்தது.

    இதில் வேடிக்கை என்னவெனில் பிஜேபியும் பெரும்பாலும் அப்படித்தான். அதற்கும் மிக உறுதியான ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர் படை இல்லை. இதன் காரணமாகவே பிஜேபி ஆர் எஸ் எஸை நம்பி இருக்கிறது.இருந்த போதிலும் கடந்த பத்து ஆண்டு ஆட்சியின் காரணமாக பிஜேபி தனித்த அரசியல் கட்சியாக வளர்ந்து விட்டது. மெல்ல மெல்ல பிஜேபி தான் தனியான கட்சி, சுதந்திரமான கட்சி, ஆர் எஸ் எஸ்ஸின் முன்னணி அமைப்பு அல்ல என்று நிலை நாட்ட விரும்புகிறாது. பி ஜே பி தலைவர் ஜே பி நட்டா 2024 இல் கொடுத்த ஒரு பேட்டியில் நாங்கள் எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம். அவர்கள் அதாவது ஆர் எஸ் எஸ் அவர்கள் பணியைச் செய்கிறார்கள் என்றார்.

    இன்று பிஜேபி கட்சியில்   பல நீண்டகால ஆர் எஸ் எஸ் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு மற்ற கட்சிகளிலிருந்து வந்த தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே பாருங்களேன்.  அண்ணாமலை ஆர் எஸ் எஸ் காரர் அல்ல. இப்போது தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து வந்தவர். மேற்கு வங்காளத்தில் உள்ள பெரும்பாலான பிஜேபி தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி, திருணமூல் கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளிலிருந்து வந்தவர்கள்.

    தவிர பிஜேபி ஆர் எஸ் எஸ்ஸில் எப்போதும் ஒரு துறையில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு பஞ்சம் இருக்கும். அத்தகைய நிபுணர்களை அவர்கள் வெளியில் இருந்தே அழைத்துக் கொள்வார்கள். இப்போதும் மத்திய அமைச்சரவையில் உள்ள ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள் அல்ல. இது ஆர் எஸ் எஸ் –பிஜேபி உறவில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

    கொஞ்சகாலமாகவே பிஜேபி அரசும் மோடியும், அமித் ஷாவும் இந்து மகாசபையைச் சேர்ந்த சாவர்க்காரை முன்னிலைப் படுத்தி வருகின்றனர். தங்கள் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வல்கரை அவ்வாறு புகழ்வதில்லை. வேடிக்கை என்னவெனில் சாவர்க்காருக்கு ஆர் எஸ் எஸ் மீது அவ்வளவு நல்ல எண்ணம் இல்லை.  திட்ட வேறு செய்திருக்கிறார். “அவன் கல்லறையில் எழுதுங்கள். பிறந்தான், ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்தான். இறந்து விட்டான்.” அதாவது ஒன்றுமே செய்யாமல் இறந்து விட்டான் என்று சொல்லியிருக்கிறார்.

    ஆர் எஸ் எஸ்ஸும் இந்துமகாசபையை ஒரு போதும் தேர்தலில் ஆதரித்ததில்லை. ஆனால் இன்றையை பிஜேபி, ஆர் எஸ் எஸ் தலைவர்களான ஹெட்கேவார், கோல்வால்கருக்கு பதில் சாவர்க்காரை தங்கள் தலைவராக முன்வைக்கிறது. சாவர்க்கார் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார், அந்தமான சிறையில் பலகாலம் அடைக்கப்பட்டிருந்தார் என்பது ஆர் எஸ் எஸ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என்ற குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் தந்திரம் மட்டுமல்ல. தாங்கள் தனித்துவமானவர்கள், ஆர் எஸ் எஸ்ஸை நம்பி இல்லை என்பதை நிலை நாட்டவும் சாவர்க்கார் பயன்படுத்தப்படுகிறார். அமித் ஷாவின் வரவேற்பறையில் சாவர்க்கார் படம் தான் இருக்கிறது.  கோல்வால்கர், ஹெகேவார் படங்கள் இல்லை.

    சொல்ல வருவது என்னவெனில் அவர்களுக்குள்ளேயே பல தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் எங்கே நாடு முழுவதையும் சதி செய்து கட்டுப்படுத்துவது.

    இந்த சதிக் கோட்பாடு எங்கிருந்து வந்தது, எப்படி இதைப் பல தோழர்கள் நம்புகிறார்கள் என்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

    • இந்தியாவில் நடக்கும் அனைத்துக்கும் பின்னால் பார்ப்பனர்களின் நலன் இருக்கிறது. அவர்கள் சாதியை உருவாகினர், பெண்ணடிமைத் தனத்தை உருவாக்கினர், மூட நம்பிக்கைகளை உருவாக்கினர். இப்போதும் சமூகம் முன்னால் நகர விடாமல் தடுத்து வருகின்றனர் என்ற திராவிடர் கழகக் கொள்கை. 
    • மகாத்மா காந்தி கொலை, மற்றும் இந்திரா காந்தி பரப்பிய வலதுசாரி சி ஐ ஏ தொடர்பு, சதி வலைகள் போன்ற கருத்துக்கள்.
    • அன்னா ஹஸாரேவை ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது, ரஜினிகாந்த் போன்றவர்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயன்றது. அதிமுக, பாமகவுக்குள் ஊடுருவியது.

    இதில் மூன்றாவது காரணம் பிஜேபி கார்ப்பரேட் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க முயன்ற போது நடந்தது. அதிமுக, பாமக விஷயம் எல்லாம் பிஜேபி ஆட்சியில் நிலைத்து நின்ற பிறகு பதவி பலத்தைப் பயன்படுத்திச் செய்தது. அதில் அதிமுக பலவீனமும் இருக்கிறது.  மற்ற இரண்டு காரணங்களுக்கும் இக்கட்டுரையில் முற்பகுதியில் போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.

    இந்த சதிக் கோட்பாடு நமக்கு அறிவுத் துறையில் மாபெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஜவஹர் நகர் புனரமைப்புத் திட்டம், ஸ்மார்ட் சிடி திட்டம், குடிநீர் தனியார்மயம், புலிகள் காப்பகங்கள் போன்ற மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் சதி வேலைகளில் ஈடுபடும். அது போல ஆர் எஸ் எஸ் – பிஜெபியும் அத்தகைய வேலைகளில் ஈடுபடத்தான் செய்யும். ஆனால் சதிகள் மட்டுமே எதையும் தீர்மானிப்பதில்லை.  வலிமை வாய்ந்த அரசியல் பொருளாதார சக்திகளின் நடவடிக்கையே நாட்டின் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது. அதைப் புரிந்து கொள்ளத் தவறினால்  நாம் யாரை எதற்கு எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே குழம்பிப்  போய் திக்குத் தெரியாத காட்டில் தவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

    இரா. முருகவேள்.

    டி எம் டி கே ஸ்டார்ட், ரஜினிகாந்த் ஆஃபர் டு வி தி லீடர்ஸ், – பிங்கி ரஜ்புரொஹித் ஏபிபிலைவ்.காம்
    rontline Will the RSS lose control of its most successful creation?
     DATTAPRASAD DABHOLKAR
    1. ↩︎
    2. ↩︎

  • The Idealist Critique of Idealism- Marx-Ambedkar-Periyar

    The Idealist Critique of Idealism- Marx-Ambedkar-Periyar

    The Young Hegelian Trap: Understanding the Philosophical Limitations of Contemporary Ambedkarite and Periyarist Movements

    The fundamental limitation that Marx and Engels identified in the Young Hegelians provides a precise theoretical framework for understanding both the historical role and contemporary stagnation of Ambedkarite and Periyarist movements in India. This parallel is not merely analogical but structural: both represent phases of ideological development that challenge dominant ideas while remaining trapped within the very idealist framework they purport to oppose.

    The Idealist Critique of Idealism

    The Young Hegelians — Feuerbach with his “religion of humanity,” Bauer with his atheism, Strauss with his historical criticism — focused their attack exclusively on religious consciousness while leaving untouched the material foundations of state power and private property. Similarly, Ambedkar and EVR mounted powerful critiques of Brahminical religion and caste ideology, yet their solutions remained largely within the realm of consciousness: conversion to Navayana Buddhism for Ambedkarites, Militant Atheism for Periyarists.

    Before proceeding, an important clarification: the Old Hegelians are not equivalent to Sanatani orthodoxy in any precise sense. This analogy, while useful pedagogically, should not be taken as exact mirroring. Not everything in Europe finds its parallel in India — the intellectual history of India is different because the economic history of India is different from Europe. The feudal-to-capitalist transition that shaped European philosophy unfolded differently in the colonial and post-colonial Indian context.

    Now,Applying the framework developed in The German Ideology to the Indian context reveals striking parallels:

    “The Old Hegelians (Sanatanis) had comprehended everything as soon as it was reduced to a Hegelian logical category (Vedic scriptures). The Young Hegelians (Ambedkarite and Periyarist) criticised everything by attributing to it religious conceptions or by pronouncing it a theological matter. The Young Hegelians (Ambedkarite and Periyarist) are in agreement with the Old Hegelians (Sanatanis) in their belief in the rule of religion, of concepts, of a universal principle in the existing world. Only, the one party attacks this dominion as usurpation, while the other extols it as legitimate.

    Since the Young Hegelians (Ambedkarite and Periyarist) consider conceptions, thoughts, ideas, in fact all the products of consciousness, to which they attribute an independent existence, as the real chains of men (just as the Old Hegelians (Sanatanis) declared them the true bonds of human society) it is evident that the Young Hegelians (Ambedkarite and Periyarist) have to fight only against these illusions of consciousness. Since, according to their fantasy, the relationships of men, all their doings, their chains and their limitations are products of their consciousness, the Young Hegelians (Ambedkarite and Periyarist) logically put to men the moral postulate of exchanging their present consciousness for human, critical or egoistic consciousness, and thus of removing their limitations. This demand to change consciousness amounts to a demand to interpret reality in another way, i.e. to recognise it by means of another interpretation.

    The Young-Hegelian (Ambedkarite and Periyarist) ideologists, in spite of their allegedly “world-shattering” statements, are the staunchest conservatives. This critique, while acknowledging the historical context of the founders, applies with full force to most of their contemporary adherents. The most recent of them have found the correct expression for their activity when they declare they are only fighting against “phrases.” They forget, however, that to these phrases they themselves are only opposing other phrases, and that they are in no way combating the real existing world when they are merely combating the phrases of this world. The only results which this philosophic criticism could achieve were a few (and at that thoroughly one-sided) elucidations of Christianity (Vedic religion) from the point of view of religious history; all the rest of their assertions are only further embellishments of their claim to have furnished, in these unimportant elucidations, discoveries of universal importance.

    It has not occurred to any one of these philosophers to inquire into the connection of German philosophy (Indian philosophy) with German reality (Indian reality), the relation of their criticism to their own material surroundings.”

    This is the crux: both the orthodox Brahminical order and its Ambedkarite-Periyarist critics agree that the fundamental problem is one of ideas — religious conceptions, cultural practices, consciousness itself. They differ only on which set of ideas should prevail, not on whether ideas themselves constitute the primary terrain of struggle.

    Applying this Marxist Critique ,we can identify three necessary consequences — logical outcomes inherent to their idealist foundations — that define the Ambedkarite and Periyarist movements:

    First: Misunderstanding the Material Base of Caste

    Ambedkarists and Periyarists fail to see cultural reality as a reflection of economic structures. They correctly identify caste as a cultural and ideological phenomenon but mistakenly treat it as an independent variable rather than as superstructure built upon a material base. Some even reverse the relationship, treating ideological structures (religion) as the foundation from which economic relations emerge.

    By attacking cultural elements like religious symbols and social customs while proposing alternate cultures like Navayana Buddhism or atheism — yet ignoring the economic foundation, the property relations and modes of production that require caste for their reproduction — their struggle resembles cutting weeds while leaving roots intact. They aim to change consciousness without changing the social being that determines it.

    Second: Misunderstanding the Class Character of the State

    Their engagement with the state is premised on the liberal illusion that it is a neutral arbiter capable of delivering social justice. They cannot comprehend that the state exists to preserve ruling class interests, and that in the Indian context, the perpetuation of caste consciousness is a primary means through which it achieves this goal.

    By dividing the working masses along caste lines, the state prevents the emergence of unified class consciousness and class action. A fight against caste is necessarily a fight against the state which strives hard to sustain the caste fissures. Seeing the state as a neutral spectator which has no role in this is a profound problem.

    Third: Becoming Controlled Opposition

    This combination of flaws makes these movements an ideal pet project for the ruling order. The state and the bourgeoisie actively incubate them as forms of controlled opposition. By funding, memorializing, and institutionalizing a politics that is vocally anti-Brahminical but functionally anti-revolutionary, they channel genuine anger into the safe confines of identity politics.

    This creates a pseudo-revolutionary, and ultimately counter-revolutionary, force that attacks the symptoms of caste (cultural discrimination) while protecting its material core (class exploitation). Radical phraseology provides the appearance of dissent while practice reinforces the status quo.

    Historical Conditioning vs. Contemporary Stagnation

    This limitation was historically conditioned. The class character of the Dravidian movement constrained Periyar’s reach, while Ambedkar’s engagement with the colonial and post-colonial state imposed practical boundaries on his radicalism. Within their historical context, their work represented genuine progress — the Gandhian Congress was progressive compared to existing society, and Ambedkarite and Periyarist movements were more progressive than the Gandhian Congress on social questions, though not as revolutionary as Marxists.

    However, what was historically conditioned limitation in the founders has become chosen stagnation in their followers. To remain at this “Young Hegelian” stage today — when productive forces have developed immensely and social contradictions have matured — constitutes intellectual regression. The excuse that “the founders couldn’t foresee the future” holds no validity for contemporary movements that refuse to analyze present material reality.

    The Necessary Dialectical Evolution

    A genuine progressive evolution of Ambedkar’s or Periyar’s thought should have reached Marxism by now, questioning property relations and the class nature of the state. This requires integrating insights about caste oppression within a materialist analysis that understands caste as embedded within and serving class exploitation.

    The alternative is perpetual stagnation: radical in appearance, conservative in essence — fighting phrases with phrases while the material world producing oppression continues unchanged.

    -to be continued-