எங்கள் ஆசிரியர் குழுவின் நோக்கம் தமிழ்நாட்டில் வசிக்கும் உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக்களை பரவலடையச் செய்வதே.
எனவே இந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் பெரும்பாலும் தொழிலாளர்களாலும் மாணவர்களாலும் எழுதப்படுபவை ஆகும். அதேபோல உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் மையக் கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்குவதால் மாறுபட்ட அரசியல் பொருளியல், சமூக-கலாச்சார வேறுபாடுகளை தாங்கியே கட்டுரைகள் இருக்கும்.
எங்கள் ஆசிரியர் குழு முரண்பாடு தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளின் உள்ளடக்கத்தையும் அதன் அரசியல் தன்மையையும் மதிப்பீடு செய்து அதன் பிறகு வெளியிடும்.
பல கட்சி அரசியல் நிலவும் இந்தியா- தமிழ்நாடு சூழலில் எந்தக் கட்சியின் சார்பாகவும் செயல்படாமல் தனித்தன்மையோடு செயல்படுவதால் பலதரப்பட்ட பார்வைகள் கொண்ட கட்டுரைகள் இந்த தளத்தில் வெளியிடப்படும்.
முரண்பாடு செய்தித்தளம் தமிழ் வாசகர்களுக்காக இயங்கினாலும் ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என்கிற தடையின் காரணமாக தமிழ்நாடு கடந்த எழுத்தாளர்களின் கருத்துக்களையும் வெளியிட வேண்டிய அவசியம் கருதி ஆங்கில மொழியிலும் இங்கே செய்திகள் பகிரப்படும்.
வேலைத்திட்டம்.
சமூக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் இந்த Post truth காலத்தில் உண்மைத் தன்மைகள் கொண்ட செய்திகளையும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்துக்களையும், கட்டுரைகளையும் இந்த முரண்பாட்டு தளம் தாங்கி நிற்கும்.
