
மேகமலை கிராமப்புற மக்களின் அகற்றும் நாடகமும் அரசு இயந்திரமும்
இந்தியாவின் நவீன மூலதன வளர்ச்சிப் போக்கில் கிராமப்புறங்களும் காடுகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் எதேச்சையானவையல்ல. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் அரங்கேறிவரும் தொடர் அகற்றும் நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவுகளும், அதை போன்ற புலிகள் காப்பக- யானைகள் வழித்தட பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வேலி அமைக்கும் இயக்கத்தை’ (Enclosure Movement) அச்சு அசலாக மீண்டும் நினைவூட்டுகின்றன.
1. வரலாற்று ஒப்புமையும் நவீன ‘வேலி அமைக்கும் இயக்கமும்’
பிரிட்டிஷ் வரலாற்றில் நிகழ்ந்த ‘வேலி அமைக்கும் இயக்கம்’ என்பது, கிராமப்புறங்களின் பொது நிலங்களைச் சீரழித்து, அங்கு வாழ்ந்த எளிய மக்களை நிலத்திலிருந்து விரட்டியடிக்கும் ஒரு கொடூரமான பொருளாதார நடவடிக்கையாகும். பொது மேய்ச்சல் நிலங்கள், காடுகள் மற்றும் எளிய மக்களின் கூட்டுரிமைப் பகுதிகள் அனைத்தும் பெரும் நிலப்பிரபுக்களாலும் மூலதன சக்திகளாலும் சட்டப்பூர்வமாக வேலியிடப்பட்டு அபகரிக்கப்பட்டன.
கார்ல் மார்க்ஸ் (Karl Marx) மற்றும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் (Friedrich Engels) ஆகியோர் தாங்கள் எழுதிய நூல்களில், குறிப்பாக மார்க்சின் புகழ்பெற்ற ‘மூலதனம்’ (Das Kapital — Volume 1, Part 8) நூலில் இந்த ‘வேலி அமைக்கும் இயக்கம்’ (Enclosure Movement) குறித்தும், அதன் பின்னணியில் உள்ள மூலதனச் சுரண்டல் குறித்தும் விரிவாக எழுதியுள்ளனர். அதை இந்த கால கட்டத்தில் மீள் வாசிப்பு செய்வது, நிகலகால நிகலவுகளை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
இதற்கு ஒப்பான வரலாற்று முறைதான் இன்று இந்தியாவிலும் அரங்கேறுகிறது. கிராமப்புறங்களின் தற்சார்பு வாழ்க்கை முறை தகர்க்கப்பட்டு, மக்கள் நகரங்களின் விளிம்புகளுக்குத் துரத்தப்படுகிறார்கள். மூலதனச் சந்தைக்குத் தடையற்ற மலிவான உழைப்புச் சக்தி (Reserve Army of Labour) எப்போதுமே தேவைப்படுவதால், கிராமப்புற மக்களை நகர்ப்புறப் suburbs-களுக்குத் தள்ளுவதே மூலதன அரசின் தவிர்க்க முடியாத வேலையாக உள்ளது.
2. ஊதியக் கட்டுப்பாடும் (Wage Floor) கிராமப்புறப் பாதுகாப்பும்
கிராமப்புறங்களில் உள்ள இலவச மேய்ச்சல் நிலங்கள், இலவச தண்ணீர், இலவச விறகு சேகரிப்பு, பொதுக் காடுகள் மற்றும் மலிவான வாழ்க்கை முறை என்பவை நகர்ப்புறக் கூலித் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன. இந்த மலிவான வாழும் சூழல் இருக்கும் வரை, உழைப்பாளி வர்க்கம் முற்றிலும் மூலதனத்தின் தயவை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதில்லை.
ஆனால், மலிவான வாழ்க்கைக்கான இந்தத் தேர்வுகள் இருப்பதும், மக்கள் வேலையற்ற பாட்டாளிகள் சேமப் படையில் (Unemployed Reserve Army) சிக்காமல் இருப்பதும் மூலதன முறைமைக்கு ஒரு பிரச்சினையாகும். எனவே, கிராமப்புறங்களின் இந்த அடிப்படை வசதிகளைத் தகர்த்து, அவர்களை நகர்ப்புற மலிவு உழைப்பாளிகளாக மாற்றுவது அவசியமாகிறது. சாலைகள், மின் இணைப்புகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் அரசு வழங்கும் இலவசங்கள் ஆகியவை மூலதன வளர்ச்சிக்குச் சுமையாகக் கருதப்பட்டு, அந்த கிராமப்புறக் கட்டமைப்பு அழிக்கப்படுகிறது.
3. நீதித்துறையும், ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நாடகமும்
சுற்றுச்சூழல், காடு மற்றும் பூமி மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அக்கறை என்பது ஒரு நகைச்சுளையாகவே தோன்றுகிறது. ஆயிரக்கணக்கான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படாமல் கிடக்கும் போது, இந்த வகையான தீர்ப்புகளை மட்டும் உலகமே உடனே மூழ்கிவிடுவது போல அதிகாரிகள் அவசரமாகச் செயல்படுகிறார்கள்.
4. பொதுநல வழக்கு (PIL) எனும் அரசந்திரத் தந்திரம்
உண்மையில், பொதுநல வழக்கு (PIL) என்பது அரச தந்திரத்தின் (Statecraft) ஒரு நிலையான இயக்க நடைமுறையாகும் (Standard Operating Procedure). அரசின் நிருவாகம் அல்லது செயலூக்கம் எதையாவது செய்ய விரும்பும்போது, அதற்காக ஒரு ப்ராக்ஸியை (Proxy)த் தேடி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்ய வைப்பார்கள். பின்னர், அரசும் உரிய தரவுகளுடன் வழக்கில் முறையாக வாதிடாமல் தோற்றுப் போகும். இதனைக் கொண்டு பலமான நீதிமன்றம் சில வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.
மேகமலை போன்ற பகுதிகளில் புலிகள் காப்பகம் என்ற பெயரில் அரங்கேறும் இந்த வெளியேற்றங்களும், நவீன ‘நிலப் பறிப்பு’ அரசியலும், ஏழைகளின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி மூலதனத்திற்குத் தேவையான இயற்கை வளங்களை பெருமூலதானம்்சுரண்டவும் , மலிவு உழைப்பை உருவாக்கவும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை.
எனினும், இடதுசாரிகளின் வலிமையினால் சட்டமாக்கப்பட்ட வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) என்பது இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களுக்கு ஒரு சட்ட அரணாக இருக்கிறது. நிலம் மற்றும் வாழ்வுரிமையை இழந்து நிற்கும் எளிய மக்கள், தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி போராடவும் இது ஒரு முக்கியமான பவிந்து புள்ளியாக (Pivot Point) விளங்குகிறது. ஆனால், அந்த அதிகாரமும் மாற்றமும் மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகும்.
- Lumban comrade

Leave a Reply